

பங்குச் சந்தைகள் இன்று(புதன்கிழமை) சரிவில் தொடங்கி வர்த்தகமான நிலையில் சற்றே சரிவுடன் நிறைவு பெற்றுள்ளன. தொடர்ந்து 3 ஆவது நாளாக பங்குச்சந்தைகள் சரிவுடன் முடிந்துள்ளன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,150.64 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 31.46 புள்ளிகள் குறைந்து 85,106.81 புள்ளிகளில் நிலை பெற்றது. காலையில் சென்செக்ஸ் 300 புள்ளிகள் வரை குறைந்தது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 46.20 புள்ளிகள் குறைந்து 25,986.00 புள்ளிகளில் நிறைவு பெற்றது.
மற்ற அனைத்துத் துறைகளும் சரிந்தாலும் ஐடி, மீடியா மற்றும் தனியார் வங்கிகளின் பங்குகள் நல்ல லாபத்தைப் பெற்றன .
நிஃப்டியில் விப்ரோ, ஹிண்டால்கோ, டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நல்ல லாபத்தை பெற்றன. மேக்ஸ் ஹெல்த்கேர், டாடா நுகர்வோர், அதானி நிறுவனங்கள் சரிவைச் சந்தித்தன.
சென்செக்ஸ் நிறுவனங்களில் பாரத் எலக்ட்ரானிக்ஸ் 2.13% என்ற அதிக சரிவைச் சந்தித்தது. அதைத் தொடர்ந்து டைட்டன், மாருதி சுசுகி, மஹிந்திரா & மஹிந்திரா, எஸ்பிஐ அதிக நஷ்டத்தைச் சந்தித்த நிறுவனங்கள். டிசிஎஸ், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கிகள் லாபத்தைச் சந்தித்துள்ளன.
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்து ரூ. 90-யைக் கடந்துள்ளது, இந்திய ரிசர்வ் வங்கியின் கூட்டம், மோடி - புதின் சந்திப்பு, வெளிநாட்டவர்களின் பங்குகள் விற்பனை, வங்கித்துறை பங்குகள் சரிவு உள்ளிட்டவை பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.