

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை புதன்கிழமை காலை சந்தித்துள்ளது.
நேற்றைய இன்ட்ராடே வர்த்தகத்தில் ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத வகையில் ரூ. 90-ஐ எட்டியது. பின்னர் டாலருக்கு நிகராக 42 காசுகள் குறைந்து ரூ.89.95 ஆக நிலைபெற்றது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு மேலும் சரிந்து ரூ. 90.15 ஆக உள்ளது. வரலாற்றில் முதல்முறையாக டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 90-ஐ கடந்துள்ளது.
இந்தியா - அமெரிக்க இடையேயான வர்த்தக ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படாமல், தொடர் பேச்சுவார்த்தையில் இருக்கும் நிலையில், ரூபாயின் மதிப்பு சரிவைக் கண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.