ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்

தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறைமுக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.
ரூ.386 கோடியில் பசுமை இழுவைப் படகு: வ.உ.சி. துறைமுகம் ஒப்பந்தம்
Updated on
1 min read

தூத்துக்குடி: தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுக ஆணையம் நிலையான துறைமுக செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக, ரூ.385.76 கோடி மதிப்பில் பசுமை இழுவைப் படகை வாங்கவுள்ளது.

இதற்கான ஒப்பந்தம் கேஎம்இடபிள்யு நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இப்படகு 2 ஆண்டுகளுக்குள் வழங்கப்படும். இந்தக் கொள்முதல் பசுமை இழுவைப் படகு மாற்றத் திட்டத்தின் ஒருபகுதியாகும். இது, முக்கியத் துறைமுகங்களில் டீசலில் இயங்கும் இழுவைப் படகுகளை படிப்படியாக நீக்கி, அவற்றை மின்னூட்டி, அமோனியா, ஹைட்ரஜன் மூலம் இயக்கப்படும் பசுமை இழுவைப் படகுகளாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்ட முயற்சியாகும்.

இம்முயற்சி உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கு இந்தியாவின் பங்களிப்பை வலுப்படுத்தக்கூடிய 5 முக்கிய காலநிலை உறுதிப்பாடுகளை அறிவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் அறிக்கையில் கூறியபடி, நாட்டின் படிம எரிபொருள் அல்லாத எரிசக்தித் திறனை 500 ஜிகாவாட்ஆக அதிகரித்தல், 2030ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் நாட்டின் 50 சதவீத எரிசக்தி தேவையைப் பூர்த்தி செய்தல், திட்டமிடப்பட்ட கார்பன் வெளியேற்றத்தை 100 கோடி டன்கள் குறைத்தல் போன்றவை இதில் அடங்கும் என, வ.உ.சி. துறைமுக ஆணையத் தலைவர் சுஷாந்த குமார் புரோஹித் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com