பங்குச்சந்தை: 300 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்! ஐடி பங்குகள் உயர்வு!
வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்) பங்குச் சந்தைகள் சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,624.84 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் தற்போது சென்செக்ஸ் 331.23 புள்ளிகள் குறைந்து 85,393.71 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 122.25 புள்ளிகள் குறைந்து 26,064.20 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
பஜாஜ் ஃபைனான்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், என்டிபிசி, ஏசியன் பெயிண்ட்ஸ், பவர் கிரிட், டிரென்ட், சன் பார்மா, ஐசிஐசிஐ வங்கி ஆகியவை இன்று சென்செக்ஸில் அதிக இழப்பைச் சந்தித்தன.
மறுபுறம் எடர்னல், டெக் மஹிந்திரா, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ் பிவி, இன்ஃபோசிஸ், எச்சிஎல் டெக், டாடா ஸ்டீல், ஆர்ஐஎல் ஆகியவை அதிக லாபம் ஈட்டி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.39 சதவீதமும் ஸ்மால் கேப் குறியீடு 0.77 சதவீதமும் சரிந்தன.
துறைகளில், நிஃப்டி ரியல் எஸ்டேட் ,பொதுத்துறை வங்கி, பார்மா குறியீடுகள் 0.3 சதவீதம் முதல் 0.5 சதவீதம் வரை சரிந்தன. அதேநேரத்தில் நிஃப்டி ஐடி 0.5 சதவீதமும் நிஃப்டி உலோகம் 0.2 சதவீதமும் உயர்ந்தன.
Stock Market Updates: Nifty below 26,100, Sensex down 320 pts
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

