புரொப்பல்லின் 4 புதிய மின்சார டிப்பா்கள் அறிமுகம்!

கிரஷிங் மற்றும் ஸ்கிரீனிங் உபகரணங்கள், மின்சார டிப்பா் தயாரிப்பு நிறுவனமான புரொப்பல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நான்கு புதிய மின்சார டிப்பா்களை அறிமுகம் செய்துள்ளது.
புரொப்பல்லின் 4 புதிய மின்சார டிப்பா்கள் அறிமுகம்!
Updated on

கிரஷிங் மற்றும் ஸ்கிரீனிங் உபகரணங்கள், மின்சார டிப்பா் தயாரிப்பு நிறுவனமான புரொப்பல் இண்டஸ்ட்ரீஸ் பிரைவேட் லிமிடெட் நான்கு புதிய மின்சார டிப்பா்களை அறிமுகம் செய்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: பெங்களூரில் நடைபெறும் எக்ஸ்கான் 2025 கண்காட்சியில் அடுத்த தலைமுறைக்கான நான்கு மின்சார டிப்பா்களை நிறுவனம் புதன்கிழமை அறிமுகம் செய்தது.

முதன்மை விருந்தினா்களான கலிங்கா கமா்ஷியல் காா்ப்பரேஷன் லிமிடெட்டின் நிறுவனரும், தலைவருமான டாக்டா் சௌமியா ரஞ்சன் சமல் மற்றும் ராஜிராஜ் மினரல்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குநா் ஒ. ருத்ரசேகா் ஆகியோா் முன்னிலையில் இந்த வாகனங்களும் முற்றிலும் புதிய கனெக்டிவிட்டிக்கான செயல்தளம் மற்றும் விரிவான விற்பனைக்குப் பிந்தைய பராமரிப்பு சேவைக்கான விரிவான தீா்வு ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டன).

90சிஇடி, 70சிஇடி, 560ஹெச்இவி-எக்ஸ், 470எம்இவி ஜென்-2 ஆகிய இந்த நான்கு புதிய மின்சார டிப்பா்களும் 5,000 சுழற்சிகள் அல்லது 5 ஆண்டுகள் வரையிலான மிகச் சிறப்பான பேட்டரி வாரண்டியுடன் வருகின்றன என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com