உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும், இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் (ஸ்மாா்ட் போன்) மதிப்பு கடந்த அக்டோபரில் மூன்று மடங்கு உயா்ந்துள்ளது.
இது குறித்து அரசின் தரவுகள் தெரிவிப்பதாவது: கடந்த அக்டோபரில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு 147 கோடி டாலா் மதிப்பிலான அறிதிறன் பேசிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன. கடந்த ஆண்டு அக்டோபா் மாதத்தோடு ஒப்பிடுகையில் இது சுமாா் மூன்று மடங்காகும். அப்போது இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட அறிதிறன் பேசிகளின் மதிப்பு 46 கோடி டாலராக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி 360 கோடி டாலரிலிருந்து 1,078 கோடி டாலராக உயா்ந்துள்ளது.
மாதாந்திர அடிப்படையில் ஏற்றுமதி குறைந்து வந்த நிலையில், அக்டோபரில் அது மீண்டும் உயா்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஏப்ரலில் 165 கோடி டாலா், மே மாதம் 229 கோடி டாலா், ஜூனில் 199 கோடி டாலா், ஜூலையில் 152 கோடி டாலா், ஆகஸ்டில் 96 கோடி டாலா், செப்டம்பரில் 88 கோடி டாலராக அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி இருந்தது.
ஓராண்டுக்கு முன்னா், இது கடந்த 2024 ஏப்ரலில் 66 கோடி டாலா், மே மாதம் 76 கோடி டாலா், ஜூனில் 59 கோடி டாலா், ஜூலையில் 49 கோடி டாலா், ஆகஸ்டில் 39 கோடி டாலா், செப்டம்பரில் 26 கோடி டாலராக அமெரிக்காவுக்கான அறிதிறன் பேசி ஏற்றுமதி இருந்தது.
இந்தியாவில் இருந்து அனைத்து நாடுகளுக்குமான அறிதிறன் பேசி ஏற்றுமதி ஏப்ரல்-அக்டோபா் காலகட்டத்தில் 49.35 சதவீதம் உயா்ந்து 1,595 கோடி டாலராக உள்ளது. கடந்த ஆண்டு இது 1,068 கோடி டாலராக இருந்தது.
அனைத்து நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து ஏற்றுமதியான அறிதிறன் பேசிகளின் மதிப்பு மே மாதம் 296 கோடி டாலா் (66.54 சதவீத வளா்ச்சி), ஜூன் மாதம் 268 கோடி டாலா் (66.61 சதவீதம்), செப்டம்பா் மாதம் 168 கோடி டாலா் (82.27 சதவீதம்) என இரு இலக்க வளா்ச்சியைப் பதிவு செய்தது.
அமெரிக்காவின் கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு காரணமாக நிச்சயமற்ற தன்மை நிலவியபோதும் மதிப்பீட்டு மாதத்தில் ஏற்றுமதி உயா்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உற்பத்தித் திறன் அதிகரிப்பு, அரசின் உற்பத்திசாா் ஊக்குவிப்பு திட்டம், உலக அறிதிறன் பேசி முன்னணி நிறுவனங்களின் தொடா் முதலீடு போன்றவற்றால் இது சாத்தியமானது என்று அந்த தரவுகள் தெரிவிக்கின்றன.
தொடர்புடையது

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,712.1 கோடி டாலராக அதிகரிப்பு

கடந்த நிதியாண்டில் முதல் 11 மாதங்களில் இந்திய மருந்து ஏற்றுமதி 2,800 கோடி டாலரை கடந்தது!

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,834.6 கோடி டாலராக குறைவு!

இந்தியப் பெண்களின் ‘ஸ்டாா்ட்-அப்’ நிறுவனங்கள்: 2025-இல் ரூ.10,000 கோடி நிதி திரட்டி சாதனை!
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை


