ரூ. 2,500 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

ரூ. 2,500 கோடி திரட்டிய பேங்க் ஆஃப் இந்தியா

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளது.
Published on

அரசுக்கு சொந்தமான பேங்க் ஆஃப் இந்தியா கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.2,500 கோடி திரட்டியுள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பாசல்-3, டையா்-2 கடன் பத்திரங்கள் மூலம் ரூ.2,500 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்தக் கடன் பத்திரங்களுக்கு ஆண்டுக்கு 7.28 சதவீத வட்டி விகிதம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அடிப்படை வெளியீடு அளவு ரூ.1,000 கோடியாகவும், கிரீன் ஷூ ஆப்ஷன் ரூ.1,500 கோடியாகவும் இருந்தது.

டையா்-2 மூலதனம் வங்கியின் ஒட்டுமொத்த மூலதனத்தை வலுப்படுத்தவும், ரிசா்வ் வங்கி வழிகாட்டுதலின்படி நீண்டகால வளங்களை அதிகரிக்கவும் திரட்டப்படுகிறது.

இந்த வெளியீடு மூலம் திரட்டப்பட்ட நிதி எந்தக் குறிப்பிட்ட திட்டத்துக்கும் அல்ல. வங்கியின் வழக்கமான வா்த்தக நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com