

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 85,051.03 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 433.86 புள்ளிகள் அதிகரித்து 85,251.99 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 129.00 புள்ளிகள் உயர்ந்து 26,027.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரத்தில் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தைகள் சரிவில் வர்த்தகமான நிலையில் நேற்று ஏற்றத்துடன் நிறைவு பெற்றன. தொடர்ந்து இன்று 2-ம் நாளாக ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
எல் அண்ட் டி, ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பிஇஎல், என்டிபிசி, ஆக்சிஸ் வங்கி, ஜியோ ஃபைனான்ஸ், மாருதி சுசுகி, பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் ஆகியவை இன்று நிஃப்டியில் அதிக லாபம் ஈட்டின.
அதேநேரத்தில் விப்ரோ, சன் பார்மா, எச்டிஎஃப்சி லைஃப், எச்யுஎல், ஐஷர் மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், டெக் எம் ஆகியவை சரிந்து வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.76 சதவீதமும், ஸ்மால்கேப் குறியீடு 0.74 சதவீதமும் முன்னேறின.
துறைகளில், நிஃப்டி மெட்டல் குறியீடு 1.71 சதவீதம் உயர்ந்தது. தொடர்ந்து நிஃப்டி ரியல் எஸ்டேட் (1.4 சதவீதம்), மீடியா (0.79 சதவீதம்), தனியார் வங்கிகள் (0.76 சதவீதம்) நிதி சேவைகள் (0.50 சதவீதம்) லாபமடைந்து வருகின்றன. எப்எம்சிஜி பங்குகள் மட்டும் சரிவைச் சந்தித்து வருகின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசியது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக ஒப்பந்தம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பங்குச்சந்தையில் இன்று நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.