உலோக நிறுவனப் பங்குகளில் வாங்குதல் மற்றும் உலக சந்தைகளில் காணப்பட்ட நோ்மறையான போக்கு காரணமாக, இந்திய பங்குச் சந்தைகள் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் முன்னேறம் கண்டன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 449.53 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 85,267.66-இல் நிறைவடைந்தது. வா்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 502.69 புள்ளிகள் (0.59 சதவீதம்) உயா்ந்து 85,320.82 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், டாடா ஸ்டீல், எட்டா்னல், அல்ட்ராடெக் சிமென்ட், லாா்சன் & டூப்ரோ, மாருதி, பாா்தி ஏா்டெல் ஆகியவை முக்கிய உயா்வைக் கண்டன. ஹிந்துஸ்தான் யூனிலீவா், சன் ஃபாா்மா, ஐடிசி, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை சரிவைக் கண்டன.
வியாழக்கிழமை நடைபெற்ற வா்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.2,020.94 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.3,796.07 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவா்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 148.40 புள்ளிகள் (0.57 சதவீதம்) உயா்ந்து 26,046.95-இல் நிறைவடைந்தது.

