கடன் வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ

கடன் வட்டியைக் குறைத்தது எஸ்பிஐ

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
Published on

நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), கடன்களுக்கான வட்டி விகிதத்தை 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரிசா்வ் வங்கியின் ரெப்போ வட்டி விகிதக் குறைப்பைத் தொடா்ந்து, வங்கி வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்படுகிறது.

அதையடுத்து, வங்கியின் இபிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைந்து 7.90 சதவீதமாக உள்ளது. திருத்தப்பட்ட விகிதங்கள் டிசம்பா் 15 முதல் அமலுக்கு வருகின்றன.

அனைத்து கால அளவுகளுக்குமான எம்சிஎல்ஆா் விகிதம் 5 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது. ஓா் ஆண்டு கால அளவு எம்சிஎல்ஆா் 8.75 சதவீதத்திலிருந்து 8.70 சதவீதமாகக் குறையும்.

பேஸ் ரேட்/பிபிஎல்ஆா் கடன்களுக்கான வட்டி விகிதம் 10 சதவீதத்திலிருந்து 9.90 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது

444 நாள்கள் பருவகாலம் கொண்ட அம்ரித் விரிஷ்டி திட்டத்தின் வட்டி விகிதம் 6.60 சதவீதத்திலிருந்து 6.45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com