

புதுதில்லி: ஃபிளாஷ் மெமரி சிப்களின் விலை உயர்வு மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணமாக, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வீட்டு உபயோகப் பொருட்களான எல்இடி தொலைக்காட்சியின் விலை 3 முதல் 4% வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்இடி தொலைக்காட்சிகளுக்கான ஓபன் செல், செமிகண்டக்டர் சிப்கள் மற்றும் மதர்போர்டு உள்ளிட்ட முக்கிய பாகங்கள் இறக்குமதி செய்யப்படுவதாலும், ரூபாயின் மதிப்பு சரிவு ஆகியவற்றால், இந்த துறையானது ஒரு சிக்கலான நிலைக்கு சென்றுள்ளது.
செயற்கை நுண்ணறிவு, சர்வர்களுக்கான உயர் அலைவரிசை நினைவகத்திற்கான பெரும் தேவை காரணமாக உலகளவில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டு, அனைத்து வகையான ஃபிளாஷ் மெமரி சிப் விலை அதிகரித்துள்ளது.
இதனிடையில், சிப் தயாரிப்பாளர்கள் அதிக லாபம் தரும் செயற்கை நுண்ணறிவு சிப்களில் கவனம் செலுத்துவதால், தொலைக்காட்சிகள் போன்ற சாதனங்களுக்கான விநியோகம் வெகுவாக குறைந்துள்ளது.
ஹையர் அப்ளையன்சஸ் இந்தியாவின் தலைவர் என்.எஸ். சதீஷ், மெமரி சிப் பற்றாக்குறை மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்டவையால் எல்இடி டிவி விலை 3% உயரும் என்றார். அதே வேளையில், சில டிவி உற்பத்தியாளர்கள் விலை உயர்வு குறித்த தகவலை ஏற்கனவே தங்களுடைய டீலர்களுக்கு தெரிவித்துள்ளனர்.
தாம்சன், கோடாக் மற்றும் ப்ளூபங்க்ட் உள்ளிட்ட பல உலகளாவிய பிராண்டுகளின் உரிமங்களை கொண்ட டிவி உற்பத்தி நிறுவனமான சூப்பர் பிளாஸ்ட்ரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் இது குறித்து மேலும் தெரிவித்தாவது:
கடந்த மூன்று மாதங்களில் மெமரி சிப்களின் விலை 500% உயர்ந்துள்ளது. அதன் தலைமைச் செயல் அதிகாரி அவனீத் சிங் மார்வாவின் இது குறித்து தெரிவிக்கையில், மெமரி சிப் நெருக்கடி மற்றும் ரூபாயின் மதிப்பு சரிவின் தாக்கம் காரணமாக ஜனவரி முதல் தொலைக்காட்சிகளின் விலை 7 முதல்10% வரை உயரக்கூடும் என்ற நிலையில், அடுத்த இரண்டு காலாண்டுகளுக்கு மெமரி சிப்களின் விலை இதே நிலையில் நீடித்தால், தொலைக்காட்சியின் விலை மேலும் உயர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
நிபுணர்களின் இது குறித்து தெரிவிக்கையில், ஜிஎஸ்டி விகிதங்கள் மாற்றியமைக்கப்பட்ட பிறகு ஸ்மார்ட் டிவிகளின் விற்பனையில் கிடைத்த ஊக்க தொகையானது, வரவிருக்கும் விலை உயர்வால் வெகுவாக குறைக்கக்கூடும் என்றனர். அதே வேளையில் 32 அங்குலம் மற்றும் அதற்கு மேற்பட்ட அளவிலான டிவி திரைகளுக்கான ஜிஎஸ்டியை முந்தைய 28% சதவிகிதத்திலிருந்து 18% சதவிகிதமாகக் குறைத்துள்ளதால் அதன் விலை சுமார் ரூ.4,500 குறைந்தாக தெரிவித்தனர்.
மெமரி சிப்களின் விநியோகம் பெரும்பாலும் செயற்கை நுண்ணறிவு தரவு மையங்களுக்குத் திருப்பி விடப்படுவதால், ஃபிளாஷ் மெமரி மற்றும் கணினி நினைவகம் - டிடிஆர்4 ஆகியவற்றின் கொள்முதல் விலை 1,000% வரை உயர்ந்துள்ளதாக விடியோடெக்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் அர்ஜுன் பஜாஜ் தெரிவித்தார்.
கவுண்டர்பாயிண்ட் ஆராய்ச்சி நிறுவனத்தின் சமீபத்திய அறிக்கையானது, நடப்பு நிதியாண்டின் 2-வது காலாண்டில் இந்தியாவின் ஸ்மார்ட் டிவி-க்கான எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 4% குறைந்துள்ளதாக தெரிவித்தது.
இதையும் படிக்க: செயில் விற்பனை 14% உயா்வு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.