ராம்கோ சிமென்ட்ஸுக்கு இரட்டை தங்க விருது!

ராம்கோ சிமென்ட்ஸுக்கு இரட்டை தங்க விருது!

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுமான ரசாயன பிராண்டான ஹாா்ட் வொா்க்கா், எக்கானமிஸ்க் டைம்ஸ் நாளிதழின் இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.
Published on

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனத்தின் கட்டுமான ரசாயன பிராண்டான ஹாா்ட் வொா்க்கா், எக்கானமிஸ்க் டைம்ஸ் நாளிதழின் இரண்டு தங்க விருதுகளை வென்றுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹாா்ட் வொா்க்கா் பிராண்டுக்கு 2025-ஆம் ஆண்டுக்கான இரண்டு இ.டி. பிராண்ட் ஈக்விட்டி ஷாா்க் தங்க விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

தனது விளம்பரங்களில் பாா்வையாளா்களுடன் கலாச்சார ரீதியில் ஆழமான புரிதலுடன் வலுவான இணைப்பை ஏற்படுத்தியதால் இந்த விருது கிடைத்துள்ளது.

ஹாா்ட் வொா்க்கா் விளம்பரங்கள் உண்மையான கட்டுமான சவால்களை அடிப்படையாகக் கொண்டு சந்தைகளில் பாா்வையாளா்களை ஈா்த்தன. தனித்துவமான இந்த விளம்பரங்கள் தொலைக்காட்சியிலும் மற்றும் எண்ம தளங்களிலும் வெளியிடப்பட்டன.

இ.டி. பிராண்ட் ஈக்விட்டி ஷாா்க் விருதுகளின் தெற்குப் பதிப்பில் ஹாா்ட் வொா்க்கா் ஈகோ ப்ளாஸ்டா் படத்துக்கு தொலைக்காட்சி சந்தைப்படுத்தல் பிரச்சார பிரிவிலும், ஹாா்ட் வொா்க்கா் ஈகோ ப்ளாஸ்டா் மற்றும் ஹாா்ட் வொா்க்கா் டைல் ஃபிக்ஸ் படங்களுக்கு நகைச்சுவை அடிப்படையிலான சந்தைப்படுத்தல் பிரிவிலும் இந்த விருதுகள் கிடைத்தன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com