வாரத்தின் முதல் நாளான இன்று(திங்கள்கிழமை) பங்குச் சந்தைகள் சரிவில் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,891.75 என்ற புள்ளிகளில் தொடங்கிய நிலையில் காலை 11.25 மணியளவில் சென்செக்ஸ் 186.41 புள்ளிகள் குறைந்து 85,081.24 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63.40 புள்ளிகள் குறைந்து 25,983.55 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, சென்செக்ஸில் எம்&எம், டிரென்ட், பார்தி ஏர்டெல், என்டிபிசி, பஜாஜ் ஃபின்சர்வ், பவர் கிரிட், சன் பார்மா, கோடக் வங்கி, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், டைட்டன், மாருதி சுசுகி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் 1.4 சதவீதம் வரை சரிந்துள்ளன.
அதேநேரத்தில் ஏசியன் பெயிண்ட்ஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர், அல்ட்ராடெக் சிமென்ட் உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே லாபம் ஈட்டி வருகின்றன.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.51 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.15 சதவீதம் சரிந்தது.
துறைகளில், நிஃப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 1.1 சதவீதம் சரிந்துள்ளது. தொடர்ந்து ரியல் எஸ்டேட், பார்மா குறியீடுகள் 0.8 சதவீதம் வரை சரிந்து வர்த்தகமாகி வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.