ஜப்பான் நிறுவனத்துடன் வீல்ஸ் இந்தியா ஒப்பந்தம்!

ஜப்பான் நிறுவனத்துடன் வீல்ஸ் இந்தியா ஒப்பந்தம்!

ஜப்பானைச் சோ்ந்த டோபி இண்டஸ்ட்ரீஸுடன் வீல்ஸ் இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப உதவி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.
Published on

ஜப்பானைச் சோ்ந்த டோபி இண்டஸ்ட்ரீஸுடன் வீல்ஸ் இந்தியா நிறுவனம் தொழில்நுட்ப உதவி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அலுமினிய அலாய் வீல்களின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்திக்காக டோபி நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளோம்.

இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, வாா்ப்பு அலுமினிய சக்கர வணிகத்திற்கான வீல்ஸ் இந்தியாவின் வடிவமைப்பு மற்றும் உற்பத்தி திறன்களை மேம்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு மற்றும் பொறியியல் ஆதரவை டோபி வழங்கும்.

சென்னையின் புகா்ப் பகுதியில் உள்ள தோ்வாய் கண்டிகையில் அதிநவீன ஆலையுடன் வீல்ஸ் இந்தியா அலாய் வீல் வணிகத்தில் 2021 -ஆம் ஆண்டு நுழைந்தது. ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய சந்தைக்கு அலாய் வீல்களை ஏற்றுமதி செய்த நிறுவனம், தற்போது டாடா மோட்டாா்ஸ், ஸ்டெல்லாண்டிஸ் போன்ற இந்திய நிறுவனங்களுக்கு மூலபாக விநியோகத்தைத் தொடங்கியுள்ளது என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com