

புதுதில்லி: தரவுகளின் அடிப்படையில், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மின்னணுப் பொருட்கள் உள்ளிட்டவை சீனாவுக்கு ஏற்றுமதி செய்து வருவதால், இந்தியாவின் ஏற்றுமதி அதிகரித்து உள்ளதாக வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், சீனாவுடன் இந்தியாவுக்கு சுமார் 100 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிலான பெரும் வர்த்தகப் பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்தது.
சீனாவுக்கான ஏற்றுமதியில், ஏப்ரல் முதல் நவம்பர் 2024 வரையான காலகட்டத்தில் இது 9.20 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்த நிலையில், ஏப்ரல் முதல் நவம்பர் 2025 காலகட்டத்தில் இது 12.22 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்தது. இது ஆண்டுக்கு ஆண்டு 32.83% அதிகரிப்பாகும்.
சீனாவுக்கான ஏற்றுமதியில், பெட்ரோலியப் பொருட்கள் மிகப்பெரிய பங்களிப்பாளராக இந்தியா உருவெடுத்துள்ள நிலையில் அடுத்தடுத்து மின்னணுப் பொருட்கள் மற்றும் கடல்சார் பொருட்கள் உள்ளன.
அதிகரித்த தேவை மற்றும் மேம்பட்ட ஏற்றுமதி செயல்திறன் உள்ளிட்டவையால், சீனாவுடனான வர்த்தக வேகம், வலுப்பெறுவதை இது எடுத்துக்காட்டுகிறது.
இதையும் படிக்க: ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவு சரிந்து ரூ. 91.01 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.