

ரியல்மி நிறுவனத்தில் புதிதாக நர்ஸோ 90 மற்றும் நர்ஸோ 90எக்ஸ் என்ற இரு புதிய ஸ்மார்ட்போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
இவை இந்திய சந்தைக்கு டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன.
கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டையொட்டி சலுகை விலை விற்பனையில் புதிய வரவாக ரியல்மி நர்ஸோ 90 மற்றும் நர்ஸோ 90எக்ஸ் அறிமுகமாகவுள்ளன.
பேட்டரி திறன் மற்றும் தூசி, மழை போன்றவற்றில் பாதிக்கப்படாத வகையில் சிறப்பு கவனம் செலுத்தி இவை தயாரிக்கப்பட்டுள்ளதாக ரியல்மி குறிப்பிடுகிறது.
சீனாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ரியல்மி நிறுவனம் இந்திய பயனர்களைக் கவரும் வகையில் ஸ்மார்ட்போன்களை தயாரித்து வருகிறது. அந்தவகையில் தற்போது ஒரு புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகவுள்ளன.
ரியல் மி நர்ஸோ 90 சிறப்பம்சங்கள்
6.57 அங்குல அமோலிட் திரை உடையது.
திரை சுமூகமாக இயங்கும் வகையில் 120Hz திறன் கொண்டது.
திரை பிரகாசமாக இருக்கும் வகையில் 1400nits திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
ரியல்மி யூஐ 6.0 அடிப்படையாகக் கொண்ட ஆன்டிராய்டு 15 உடையது.
6nm மீடியாடெக் டைமன்சிட்டி 6400 புராசஸர் உடையது.
பின்புறம் 50MP முதன்மை கேமராவும் 2MP மோனோ சென்சாரும் கொடுக்கப்பட்டுள்ளது. பின்புறம் செல்ஃபி பிரியர்களுக்காக 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.
7000mAh டைட்டானியம் பேட்டரி உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 60W திறன் உடையது.
தூசி, நீர் புகாத்தன்மை மற்றும் வெப்பம் ஏற்பட்டால் தானியங்கி முறையில் தனித்துக்கொள்ள IP66 + IP68 + IP69 திறன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ரியல்மி நர்ஸோ 90எக்ஸ் சிறப்புகள்
6.80 அங்குல எல்.சி.டி. திரை கொண்டது.
திரை சுமூகமாக இயங்க 144Hz திறனும், பிரகாசமாக இருக்கும் வகையில் 1200nits திறனும் கொடுக்கப்பட்டுள்ளது.
6nm மீடியாடெக் டைமன்சிட்டி 6300 புராசஸர் உடையது.
பின்புறம் 50MP முதன்மை கேமராவும், முன்பக்கம் 8MP கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.
7000mAh டைட்டானியம் பேட்டரி உடையது. வேகமாக சார்ஜ் ஆகும் வகையில் 60W திறன் உடையது.
நீர்ப்புகாத் தன்மைக்காக IP65 ரேட்டிங் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.