

மும்பை: தொடர்ந்து வெளியேறி வரும் அந்நிய நிதி, பலவீனமான ரூபாய் மதிப்பு மற்றும் மந்தமான உலகளாவிய சந்தைப் போக்குகள் உள்ளிட்டவையால் சென்செக்ஸ் 533.50 புள்ளிகள் சரிந்ததும், நிஃப்டி 25,860 என்ற நிலைக்கு சென்று வர்த்தகம் நிறவைடந்தன.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில், சென்செக்ஸ் 592.75 புள்ளிகள் சரிந்து 84,620.61 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில், 30 பங்குகளைக் கொண்ட சென்செக்ஸ் 533.50 புள்ளிகள் சரிந்து 84,679.86 புள்ளிகளாகவும், 50 பங்குகளை கொண்ட நிஃப்டி 167.20 புள்ளிகள் சரிந்து 25,860.10 புள்ளிகளாக நிலைபெற்றது.
சென்செக்ஸில் ஆக்சிஸ் வங்கி அதிகபட்சமாக 5.03% சரிந்த நிலையில் எடர்னல், எச்சிஎல் டெக், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட் மற்றும் பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய பங்குகளும் வெகுவாக சரிந்தன. இருப்பினும் டைட்டன், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து முடிவடைந்தன.
ஆசிய சந்தைகளில் தென் கொரியாவின் கோஸ்பி, ஜப்பானின் நிக்கி 225 குறியீடு, ஷாங்காயின் எஸ்எஸ்இ காம்போசிட் குறியீடு மற்றும் ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு ஆகிய சந்தைகளும் கணிசமான சரிவுடன் முடிவடைந்தன. ஐரோப்பிய சந்தைகள் கலவையான நிலையில் வர்த்தகமாகிய நிலையில், அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து முடிவடைந்தன.
பங்குச் சந்தை தரவுகளின் அடிப்படையில், அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று ரூ.1,468.32 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ள நிலையில் உள்நாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் ரூ.1,792.25 கோடி மதிப்புள்ள பங்குகளை வாங்கியுள்ளனர்.
உலகளாவிய ப்ரென்ட் கச்சா எண்ணெய், 1.54% சரிந்து பீப்பாய் ஒன்றுக்கு 59.63 அமெரிக்க டாலராக உள்ளது.
இதையும் படிக்க: கியா இந்தியா விற்பனை 24% உயா்வு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.