

மும்பை: தொடர்ச்சியான அந்நிய முதலீட்டு வெளியேற்றம், பலவீனமான ரூபாய் மற்றும் உலக சந்தைகளின் மந்தமான போக்கு காரணமாக முதலீட்டாளர்களின் உற்சாகம் பாதிக்கப்பட்டு, இந்திய பங்குச் சந்தைகள் செவ்வாய்க்கிழமை சரிவில் நிறைவடைந்தன.
சென்செக்ஸ்: 30-பங்குகள் கொண்ட மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 533.50 புள்ளிகள் (0.63 சதவிகிதம்) சரிந்து 84,679.86-இல் நிறைவடைந்தது. வர்த்தகத்தின் போது அது அதிகபட்சமாக 592.75 புள்ளிகள் (0.69 சதவிகிதம்) சரிந்து 84,620.61 என்ற அளவை எட்டியது.
சென்செக்ஸ் பட்டியலில், ஆக்ஸிஸ் வங்கி 5.03 சதவிகிதம் சரிந்து மிகப்பெரிய இழப்பை அடைந்தது. எட்டர்னல், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், பஜாஜ் ஃபின்சர்வ், டாடா ஸ்டீல், அல்ட்ராடெக் சிமென்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகியவையும் சரிவைக் கண்டன. டைட்டன், பார்தி ஏர்டெல், மஹிந்திரா & மஹிந்திரா, ஏசியன் பெயின்ட்ஸ் ஆகியவை உயர்வைக் கண்டன.
திங்கள்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,468.32 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றன; உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் ரூ.1,792.25 கோடி மதிப்பிலான பங்குகளை வாங்கின என்று பங்குவர்த்தக தரவுகள் தெரிவிக்கின்றன.
நிஃப்டி: 50-பங்குகள் கொண்ட தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 167.20 புள்ளிகள் (0.64 சதவிகிதம்) சரிந்து 25,860.10-இல் நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.