சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

5 மாதங்கள் காணாத அளவு குறைந்த வர்த்தகப் பற்றாக்குறை

இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நவம்பரில் 6 மாத உச்சமான 3,813 கோடி டாலரைத் தொட்ட நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத அளவுக்கு 2,453 கோடியாகக் குறைந்துள்ளது.

News image
Updated On :16 டிசம்பர் 2025, 9:42 pm

இணையதளச் செய்திப் பிரிவு

புது தில்லி: இந்தியாவின் ஏற்றுமதி கடந்த நவம்பரில் 6 மாத உச்சமான 3,813 கோடி டாலரைத் தொட்ட நிலையில், வர்த்தகப் பற்றாக்குறை 5 மாதங்கள் காணாத அளவுக்கு 2,453 கோடியாகக் குறைந்துள்ளது.

இது குறித்து வர்த்தகத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பொறியியல் மற்றும் மின்னணு பொருள்கள் ஏற்றுமதி உயர்வால் அக்டோபரில் சரிந்த ஏற்றுமதி நவம்பரில் 19.37 சதவிகிதம் உயர்ந்து 3813 கோடி டாலராக உள்ளது. இது, கடந்த மே மாதத்துக்கு (3,873 கோடி டாலர்) பிந்தைய அதிகபட்ச இறக்குமதி. மேலும் இது, கடந்த 3.5 ஆண்டுகள் காணாத மிக வேகமான மாதாந்திர வளர்ச்சி.

மதிப்பீட்டு மாதத்தில் நாட்டின் இறக்குமதி 1.88 சதவிகிதம் குறைந்து 6,266 கோடி டாலராக உள்ளது. தங்கம், கச்சா எண்ணெய், நிலக்கரி, கோக் இறக்குமதி குறைந்தது இதற்கு முக்கிய காரணம். அந்த மாதத்தில் தங்கம் இறக்குமதி 59.15 சதவிகிதம் சரிந்து 400 கோடி டாலராகவும், கச்சா எண்ணெய் இறக்குமதி 11.27 சதவிகிதம் சரிந்து 1411 கோடி டாலராகவும் உள்ளது.

இறக்குமதி குறைந்ததால் வர்த்தகப் பற்றாக்குறை முந்தைய 5 மாதங்களில் இல்லாத அளவாக நவம்பரில் 2,453 கோடி டாலராக உள்ளது. இதற்கு முன்னர் கடந்த ஜூனில் 1,878 கோடி டாலராக இருந்ததே குறைந்தபட்ச வர்த்தகப் பற்றாக்குறை. அது கடந்த அக்டோபரில் உச்சபட்சமாக 4,168 கோடி டாலராக இருந்தது.

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் ஏற்றுமதி 2.62 சதவிகிதம் உயர்ந்து 29,207 கோடி டாலராகவும், இறக்குமதி 5.59 சதவிகிதம் உயர்ந்து 51,521 கோடி டாலராகவும் உள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை 22,314 கோடி டாலராக உள்ளது.

இந்திய பொருள்களுக்கு அமெரிக்கா 50 சதவீத கூடுதல் வரி விதித்திருந்த நிலையை சமாளித்து கடந்த நவம்பரில் நாட்டின் ஏற்றுமதி உயர்ந்துள்ளது.

அந்த மாதத்தில் பெட்ரோலிய பொருள்கள் ஏற்றுமதி 11.65 சதவிகிதம் உயர்ந்து 393 கோடி டாலராக உள்ளது. தேநீர், காபி, இரும்புத் தாது, முந்திரி, எண்ணெய் உணவு, பால்பொருள்கள், கைவினைப் பொருள்கள், கடல் உணவு, தோல் பொருள்கள் ஆகியவற்றின் ஏற்றுமதியும் உயர்ந்தன. அரிசி, எண்ணெய் விதைகள், கம்பளம், பிளாஸ்டிக் பொருள்களின் ஏற்றுமதி சரிந்தது.

கடந்த நவம்பரில் ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, சிங்கப்பூர், வங்கதேசம், சவூதி அரேபியா, ஹாங்காங் ஆகியவை இந்தியாவின் முக்கிய ஏற்றுமதிச் சந்தைகளாகத் திகழ்ந்தன.

நடப்பு நிதியாண்டின் முதல் 8 மாதங்களில் ஏற்றுமதி சுமார் 27,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. 2024-25-ஆம் நிதியாண்டின் இதே காலகட்டத்தில் அது 24,856 கோடி டாலராக இருந்தது.

இந்தியாவின் பொருள்கள் மற்றும் சேவைகள் ஏற்றுமதி 53,316 கோடி டாலரில் இருந்து 5.83 சதவிகிதம் உயர்ந்து 56,213 கோடி டாலராக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.