2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

மொத்த விலை பணவீக்கம் நவம்பரில் இரண்டாவது மாதமாக எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது.
2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்
Updated on
1 min read

புது தில்லி: மொத்த விலை பணவீக்கம் நவம்பரில் இரண்டாவது மாதமாக எதிர்மறையாகப் பதிவாகியுள்ளது. இது குறித்து தொழில்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த நவம்பரில் நாட்டின் மொத்த விலை பணவீக்கம் -0.32 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. அது அக்டோபரில் -1.21

சதவீதமாகவும், கடந்த ஆண்டு நவம்பரில் 2.16 சதவீதமாகவும் இருந்தது.

உணவுப் பொருள்கள், கனிம எண்ணெய்கள், கச்சா பெட்ரோலியம் & இயற்கை எரிவாயு, அடிப்படை உலோகங்கள் உற்பத்தி, மின்சாரம் ஆகியவற்றின் மொத்த விலை குறைந்தது நவம்பரில் எதிர்மறை பணவீக்கத்துக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

உணவுப் பொருள்களில் ஏப்ரல் முதல் தொடர்ந்து 8 மாதங்களாக எதிர்மறை பணவீக்கம் உள்ளது. நவம்பரில் -4.16 சதவீதமாகக் குறைந்த அது, முந்தைய அக்டோபரில் -8.31 சதவீதமாக இருந்தது. காய்கறிகளில் -20.23 சதவிகிதம், பயறு வகைகளில் -15.21 சதவிகிதம், உருளைக்கிழங்கில் -36.14 சதவிகிதம், வெங்காயத்தில் -64.70 சதவிகிதம் எதிர்மறை பணவீக்கம் உள்ளது.

அக்டோபரில் 1.54 சதவீதமாக இருந்த உற்பத்தி பொருள்களுக்கான பணவீக்கம் நவம்பரில் 1.33 சதவீதமாகக் குறைந்தது. எரிபொருள் மற்றும்

மின்சாரத்தில் எதிர்மறை பணவீக்கம் அக்டோபரில் -2.55 சதவீதமாக இருந்து, நவம்பரில் -2.27 சதவீதமாகப் பதிவானது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com