ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத குறைந்த அளவிலிருந்து 55 காசுகள் மீண்டு ரூ.90.38 ஆக நிறைவு!

டாலருக்கு நிகராக ரூபாயின் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த மட்டத்திலிருந்து 55 காசுகள் மீண்டு, ரூ.90.38 ஆக நிறைவடைந்தது.
இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்
Updated on
1 min read

மும்பை: ரிசர்வ் வங்கியின் தீவிர தலையீட்டிற்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமான நிகழ்வில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு அதன் வரலாறு காணாத குறைந்த மட்டத்திலிருந்து 55 காசுகள் மீண்டு, ரூ.90.38 ஆக நிறைவடைந்தது.

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் சமீபத்திய சரிவு, உள்நாட்டுப் பொருளாதார பலவீனத்தால் அல்ல என்றும், வெளிக்காரணிகளாலேயே இது ஏற்பட்டது. மாறிவரும் பொருளாதார மற்றும் அரசியல் காரணிகளுக்கு மத்தியில் அந்நியச் செலாவணி சந்தையில் அதிக ஏற்ற இறக்கம் தொடரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

அமெரிக்கா-இந்தியா வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் இல்லாததும், முதலீட்டாளர்களின் தொடர்ந்து பங்குகளை விற்பனை செய்வதால் இது சந்தை உணர்வை வெகுவாக பாதித்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் ரூ.91.05 என்ற அளவில் வர்த்தகத்தை தொடங்கி, பிறகு நாளின் அதிகபட்சமாக ரூ.89.96 என்ற நிலையை எட்டியது. இது அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 97 காசுகள் உயர்வாகும். வர்த்தக முடிவில், அதன் முந்தைய நாள் முடிவை விட 55 காசுகள் உயர்ந்து ரூ.90.38 ஆக நிலைபெற்றது.

நேற்று (செவ்வாயகிழமை) ரூபாயின் மதிப்பு ஒரு டாலருக்கு 91 க்குக் கீழே சரிந்து ரூ.91.14 என்ற குறைந்தபட்ச நிலையை எட்டியது. இறுதியாக, டாலருக்கும் நிகராக ரூ.90.93 என்ற வரலாறு காணாத குறைந்த மட்டத்தில் நிலைபெற்றது.

இதையும் படிக்க: ரூ.1.6 லட்சம் கோடி இழப்புடன் வர்த்தகம் நிறைவு!

Summary

The rupee recovered 55 paise from its all-time low level to close at 90.38 against the US dollar after a volatile trade on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com