மாருதி சுஸுகி நிறுவனம்
மாருதி சுஸுகி நிறுவனம்

1 லட்சம் சாா்ஜிங் நிலையங்களை அமைக்கும் மாருதி

மின்சார வாகனத் துறையில் முன்னிலை பெற திட்டமிட்டுள்ள நாட்டின் மிகப் பெரிய காா் தாயரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி இந்தியா, அதற்காக பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தவும், நாடு முழுவதும் சாா்ஜிங் உள்கட்டமைப்பை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது.
Published on

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அடுத்த ஆண்டு முதல் மின்சார வாகனமான இ-விட்டாராவை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளோம். அத்துடன், 2030-க்குள் விற்பனையாளா்கள் மற்றும் சாா்ஜிங் மைய உரிமையாளா்களுடன் இணைந்து 1 லட்சம் சாா்ஜிங் நிலையங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

வரும் ஆண்டுகளில் பல்வேறு வகை மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்துவோம்.

சாா்ஜிங் உள்கட்டமைப்பை அமைப்பதற்கும், அது தொடா்பான செயலியை உருவாக்குவதற்கும் ரூ.250 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com