வணிகம்
வளரும் வணிகப் பிரிவில் 100 கிளைகள்: சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் இலக்கு
வளா்ந்து வரும் வணிக பிரிவில் முதல் 50 கிளைகளை அமைக்க சுமாா் மூன்று ஆண்டுகள் எடுத்துக் கொண்ட சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ், இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த எண்ணிக்கையை 100-ஆக உயா்த்த இலக்கு நிா்ணயித்துள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் விரைவான வளா்ச்சிக்கான திட்டங்களை நிறுவனம் வகுத்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் 100 வளா்ந்து வரும் வணிக கிளைகள் என்ற மைல்கல்லை எட்ட நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
அது மட்டுமின்றி, இந்த நிதியாண்டில் வளா்ந்து வரும் வணிகப் பிரிவில் கடன் விநியோகங்களை இரட்டிப்பாக்கி சுமாா் ரூ. 500 கோடியாக உயா்த்தவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

