

புதுதில்லி: ஜெர்மன் வாகனக் குழுமமான பிஎம்டபிள்யூ-வின் இருசக்கர வாகனப் பிரிவான பிஎம்டபிள்யூ மோட்டராட் இந்தியா, தொடர் அந்நியச் செலாவணி சரிவை அடுத்து, தனது தயாரிப்புகளின் விலையை ஜனவரி 1, 2026 முதல் 6% வரை உயர்த்துவதாக இன்று அறிவித்தது.
அமெரிக்க டாலர் மற்றும் யூரோவுக்கு நிகராக, இந்திய ரூபாயின் மதிப்பு கடுமையாக சரிந்ததால், ஏற்பட்ட அந்நியச் செலாவணி அழுத்தம் பல மாதங்களாகியும் தணியததால், மூலப்பொருட்கள் மற்றும் தளவாடங்களின் உள்ளிட் செலவுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பிஎம்டபிள்யூ குழும இந்திய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஹர்தீப் சிங் பிரார் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த விலை உயர்வு நடவடிக்கையானது, நிறுவனம் மற்றும் டீலர்களுக்கு தேவையான லாபத்தையும், தொடர்ச்சியாக செயல்பட உறுதி செய்யும்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் வாகனங்களின் வரிசையில், 'மேட் இன் இந்தியா' பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர்ஆர் மற்றும் பிஎம்டபிள்யூ சிஇ 02 ஆகியவற்றுடன், பிஎம்டபிள்யூ எஃப் 900 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ எஃப் 900 ஜிஎஸ்ஏ, பிஎம்டபிள்யூ ஆர் 1300 ஜிஎஸ், பிஎம்டபிள்யூ சி 400 ஜிடி மற்றும் பிஎம்டபிள்யூ சிஇ 04 உள்ளிட்ட பிற இறக்குமதி செய்யப்பட்ட பிரீமியம் வாகனங்கள் இதில் அடங்கும்.
பிஎம்டபிள்யூ மோட்டராட் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், வாகனங்களின் ஆரம்ப விலை ரூ. 2.81 லட்சம் முதல் ரூ. 48.63 லட்சம் வரை உள்ளடக்கியது.
இதையும் படிக்க: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 54 காசுகள் உயர்ந்து ரூ.89.66 ஆக நிறைவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.