ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!

ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு பங்குகளை வாங்கியதால் அதன் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் 4% உயர்வு!
Updated on
1 min read

புதுதில்லி: ஜப்பானின் மிட்சுபிஷி யுஎஃப்ஜே ஃபைனான்சியல் குழுமம், வங்கி அல்லாத நிதி நிறுவனமான ஸ்ரீராம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் ரூ.39,618 கோடிக்கு சுமார் 20% பங்குகளை வாங்கியதால் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்குகள் கிட்டத்தட்ட 4% உயர்ந்தன.

இந்திய நிதித் துறையில் இதுவரை இல்லாத மிகப்பெரிய பன்னாட்டு முதலீடாகக் இது கருதப்படுகிறது.

பிஎஸ்இ-யில் ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பங்கு 3.74% உயர்ந்து ரூ.901.75 ஆகவும், என்எஸ்இ-யில், அதன் பங்கின் விலை 3.70% உயர்ந்து ரூ.901.70 ஆக முடிவடைந்தன. வர்த்தக நேரத்தின் போது, ​​நிறுவனத்தின் பங்குகள் 5.16% உயர்ந்து, 52 வார உச்சத்தை எட்டியது.

நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ. 6,154.63 கோடி அதிகரித்து ரூ. 1,69,651.83 கோடியாக உயர்ந்துள்ளது.

இதையும் படிக்க: கோடக் மஹிந்திரா வங்கிக்கு ரூ.62 லட்சம் அபராதம் விதிப்பு!

Summary

Shares of Shriram Finance Ltd climbed nearly 4 per cent as Japan Mitsubishi UFJ Financial Group Inc will acquire a 20 per cent minority stake in the non-banking lender for Rs 39,618 crore.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com