

வாரத்தின் கடைசி நாளான இன்று(வெள்ளிக்கிழமை) பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.
மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 84,756.79 என்ற புள்ளிகளில் தொடங்கியது. காலை 11.30 மணியளவில் சென்செக்ஸ் 397.97 புள்ளிகள் அதிகரித்து 84,879.78 புள்ளிகளில் வர்த்தகமாகிறது.
அதேபோல தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 112.15 புள்ளிகள் உயர்ந்து 25,927.70 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது.
இந்த வாரத்தில் முதல் 3 நாள்கள் பங்குச்சந்தை கடும் சரிவுடன் நிறைவு பெற்ற நிலையில் நேற்று ஏற்ற, இறக்கத்தில் மாறிமாறி இருந்து பின்னர் சற்று சரிவுடன் முடிந்தன.
இந்நிலையில் முதலீட்டாளர்களுக்கு ஆறுதலாக பங்குச்சந்தைகள் இன்று லாபத்துடன் வர்த்தகமாகி வருகின்றன.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், பாரத் எலக்ட்ரானிக்ஸ், டிஎம்பிவி, இன்ஃபோசிஸ், எல்&டி, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவற்றின் பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்து சென்செக்ஸில் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம் எச்சிஎல் டெக், என்டிபிசி, டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ஐசிஐசிஐ வங்கி, டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவைச் சந்தித்து வருகின்றன.
நிஃப்டி மெட்டல், பொதுத்துறை வங்கியைத் தவிர மற்ற அனைத்துத் துறைகளும் ஏற்றம் கண்டு வருகின்றன. அதிகபட்சமாக நிஃப்டி ஹெல்த்கேர் குறியீடு அதிக லாபம் ஈட்டியது.
நிஃப்டி மிட்கேப் குறியீடு 0.23 சதவீதம், ஸ்மால்கேப் குறியீடு 0.45 சதவீதம் உயர்ந்துள்ளன.
நேற்று(வியாழன்) அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வுடன் நிறைவு பெற்றன.
அமெரிக்காவில் பணவீக்கம் குறைந்து வருவது இந்திய பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நிபுணர்கள் கணிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.