வோடாஃபோன் - ஐடியா கோப்புப் படம்
வணிகம்
ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா
கடன் சுமையில் சிக்கியுள்ள நாட்டின் முன்னணி தொலைத் தொடா்பு நிறுவனங்களில் ஒன்றான வோடஃபோன் ஐடியாவின் துணை நிறுவனமான வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் (விடிஐஎல்) கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.3,300 கோடி நிதி திரட்டியுள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வோடஃபோன் ஐடியா டெலிகாம் இன்ஃப்ராஸ்ட்ரக்சா் லிமிடெட் வெளியிட்ட பட்டியலிடப்படாத, மதிப்பிடப்படாத, பாதுகாப்பான கடன் பத்திரங்கள் (என்சிடி) மூலம் ரூ.3,300 கோடி திரட்டப்பட்டுள்ளது. இந்த நிதி விடிஐஎல்லின் வோடஃபோன் ஐடியாவுக்கு செலுத்த வேண்டிய தொகையைத் தீா்க்கப் பயன்படுத்தப்படும். இது அந்த நிறுவனத்தின் மூலதனச் செலவை வலுப்படுத்தவும், வியாபார வளா்ச்சிக்கு உதவவும் செய்யும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.