

புது தில்லி: தாங்கள் வழங்கும் கடன்களுக்கான வட்டி விகித்ததை பொதுத் துறையைச் சேர்ந்த கனரா வங்கி 25 அடிப்படைப் புள்ளிகள் (0.25 சதவீதம்) குறைத்துள்ளது.
இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
ரிசர்வ் வங்கியின் ரெப்போ விகித குறைப்பைத் தொடர்ந்து, ரெப்போவுடன் இணைக்கப்பட்ட அடிப்படை கடன்களுக்கான (ஆர்எல்எல்ஆர்) வட்டி விகிதத்தில் 25 அடிப்படைப் புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
ஆர்எல்எல்ஆர் 8.25 சதவீதத்திலிருந்து 8.00 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த வட்டி விகித மாற்றம் டிசம்பர் 12 முதல் அமலில் உள்ளது. ஆர்எல்எல்ஆர் இணைக்கப்பட்ட கடன்களுக்கு இது பொருந்தும். இதனால் வாடிக்கையாளர்களுக்கு இஎம்ஐ அல்லது கடன் காலம் குறையும் என்று அந்த அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.