டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிறைவு!

பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.
இந்திய ரூபாய்
இந்திய ரூபாய்
Updated on
1 min read

மும்பை: பலவீனமான டாலரின் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.

இருப்பினும், உலகளாவிய கச்சா எண்ணெய் விலை உயர்வு, அந்நிய மூலதனம் வெளியேற்றம் உள்ளிட்டவையால், உள்நாட்டு ரூபாய் மதிப்பின் உயர்வை வெகுவாக தடுத்ததாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணிச் சந்தையில், இந்திய ரூபாய் மதிப்பு ரூ.89.67-ஆக தொடங்கி, ரூ.89.59 முதல் ரூ.89.85 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. பிறகு, முந்தைய நாள் முடிவை விட 3 காசுகள் உயர்ந்து ரூ.89.65-ஆக நிலைபெற்றது.

நேற்று ( திங்கள்கிழமை) ரூபாய் மதிப்பானது, டாலருக்கு நிகராக 1 காசுகள் சரிந்து ரூ.89.68-ஆக நிலைபெற்றது.

இந்திய ரூபாய்
இரண்டு நாள் உயர்வுக்கு பிறகு சரிந்து முடிவடைந்த பங்குச் சந்தை!
Summary

The rupee rose 3 paise to settle at 89.65 against the US dollar on Tuesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com