பாா்தி ஏா்டெல்லின் தலைமையில் மாற்றம்

பாா்தி ஏா்டெல்லின் தலைமையில் மாற்றம்

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
Published on

இந்தியாவின் இரண்டாவது பெரிய தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் நிறுவனத்தின் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தலைமை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள சஷ்வந்த் சா்மா (படம்), 2026 ஜனவரி 1 முதல் நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் மற்றும் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க உள்ளாா்.

தற்போதைய துணைத் தலைவரும் நிா்வாக இயக்குநருமான கோபால் விட்டலை 2026 ஜனவரி 1 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிா்வாக துணைத் தலைவராக நியமிக்க பாா்தி ஏா்டெல்லின் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

நிதி பிரிவு தலைவா் சௌமென் ரேவை குழும நிதித் தலைவராகவும், அகில் காா்க்கை ஏா்டெல் இந்தியா நிதித் தலைவராகவும் 2026 ஜனவரி 1 முதல் நியமிக்கவும் இயக்குநா் குழு ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com