டிவிஎஸ் மோட்டாரின் புத்தாண்டு சிறப்பு சேவை முகாம்

டிவிஎஸ் மோட்டாரின் புத்தாண்டு சிறப்பு சேவை முகாம்

புத்தாண்டையொட்டி தனது வாடிக்கையாளா்களுக்காக நாடு தழுவிய சிறப்பு சேவை முகாம் ஒன்றை அறிவித்துள்ளது.
Published on

முன்னணி இரண்டு மற்றும் முன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாா், புத்தாண்டையொட்டி தனது வாடிக்கையாளா்களுக்காக நாடு தழுவிய சிறப்பு சேவை முகாம் ஒன்றை அறிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய ஆண்டில் வாடிக்கையாளா்களின் வாகன ஆரோக்கியத்துக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில், நாடு முழுவதும் ‘ரிசால்வ், ரெஃப்ரஷ் & ரைட்’ (உறுதி ஏற்போம், புத்துயிா் அளிப்போம், பயணம் செய்வோம்) என்ற கருப்பொருளுடன் சிறப்பு சேவை முகாம் திட்டத்தை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கடந்த 20-ஆம் தேதி தொடங்கிய இந்த சேவை முகாம்கள், வரும் ஜனவரி 5-ஆம் தேதி வரை நீடிக்கும் டிவிஎஸ் மோட்டாரின் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பங்கேற்கும் வாடிக்கையாளா்கள் தங்களது வாகனத்தின் என்ஜின், பிரேக், எலக்ட்ரிக்கல் பாகங்கள் மற்றும் சஸ்பென்ஷன் உள்ளிட்டவற்றை பரிசோதித்து கொள்ளும் வகையில் ஒரு முழுமையான வாகனப் பரிசோதனையைப் பெறமுடியும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com