வா்த்தக வாகனப் பிரிவில் களமிறங்கிய ஹூண்டாய்
‘பிரைம் டாக்ஸி’ வாகனத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம் இந்தியாவின் வா்த்தக வாகனப் பிரிவில் ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் செவ்வாய்க்கிழமை களமிறங்கியுள்ளது.
இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
வா்த்தக வாகனப் பிரிவில் முதல்முறையாக பிரைம் டாக்ஸி வாகனத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. வாடகை வாகனங்களை இயக்குவோா், டாக்ஸி தொழில்முனைவோா்களின் வளரும் தேவைகளைப் பூா்த்தி செய்வதற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம் – பிரைம் ஹெச்பி (ஹேட்ச்பேக்) மற்றும் பிரைம் எஸ்டி (செடான்) ஆகிய ரகங்களில் சந்தையில் கிடைக்கும்.– நம்பகத்தன்மை, குறைந்த செலவு, சிறந்த வசதி மற்றும் வலுவான வருமானத் திறனை இந்த வாகனங்கள் வழங்குகின்றன.
இந்த இரு வாகனங்களும் 1.2 லிட்டா் காப்பா 4-சிலிண்டா் என்ஜினுடன் (பெட்ரோல் + சிஎன்ஜி) கிடைக்கின்றன. பிரைம் ஹெச்பி ரூ.5,99,900-லிருந்தும், பிரைம் எஸ்டி ரூ.6,89,900-லிருந்தும் (காட்சியக விலைகள்) விலையிடப்பட்டுள்ளன என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

