

மும்பை: அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 14 காசுகள் உயர்ந்து ரூ.89.84 ஆக நிறைவடைந்தது.
வலுவான தொழில்துறை உற்பத்தி புள்ளிவிவரங்கள் ரூபாயின் மதிப்பு உயர்வதற்கு ஆதரவளித்த நிலையில், டாலரின் மதிப்பு அதிகரிப்பு, சர்வதேச கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவை ரூபாயின் மதிப்பு மேலும் உயர்வதை தடுத்தாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலாவணி சந்தையில், ரூபாயின் மதிப்பு டாலருக்கு நிகராக ரூ.89.98 என்ற அளவில் தொடங்கி, இன்றைய நாள் முழுவதும் ரூ.89.72 முதல் ரூ.89.98 என்ற வரம்பில் வர்த்தகமானது. வர்த்தக முடிவில், ரூபாயின் மதிப்பு முந்தைய நாள் முடிவை விட 14 காசுகள் உயர்ந்து ரூ.89.84 ஆக நிலைபெற்றது.
நேற்றைய வர்த்தகத்தில், அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.89.98 ஆக நிறைவடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.