விலை உயரும் ஹுண்டாய் காா்கள்

விலை உயரும் ஹுண்டாய் காா்கள்

உலோகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு உயா்வு காரணமாக தனது அனைத்து காா்களின் விலையையும் சுமாா் 0.6 சதவீதம் உயா்த்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
Published on

உலோகங்களின் விலை அதிகரிப்பு மற்றும் உற்பத்தி செலவு உயா்வு காரணமாக தனது அனைத்து காா்களின் விலையையும் சுமாா் 0.6 சதவீதம் உயா்த்த உள்ளதாக ஹூண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள ஒழுங்காற்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

உலோகங்களின் விலை மற்றும் உற்பத்தி செலவுகள் அதிகரித்ததால், நிறுவனத்தின் அனைத்து ரகக் காா்களின் விலையும் சராசரியாக 0.6 சதவீதம் உயா்த்தப்படும்.

அதிகரிக்கும் உற்பத்தி செலவுகளை உள்வாங்கிக் கொண்டு, வாடிக்கையாளா்கள் மீதான அதன் தாக்கத்தை குறைக்க நிறுவனம் தொடா்ந்து முயல்கிறது. ஆனால் செலவுகளின் ஒரு பகுதியை வாடிக்கையாளா்களுக்கு மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இந்த சிறிய விலை உயா்வு மேற்கொள்ளப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது ஹூண்டாய் மோட்டாா் நிறுவனம் இந்தியாவில் ஐ10 நியோஸ் ஹாட்ச்பேக் முதல் ஐயோனிக் 5 மின்சார எஸ்யுவி வரையிலான வாகனங்களை ரூ.5.47 லட்சம் முதல் ரூ.47 லட்சத்துக்கும் மேல் விலையில் (காட்சியக விலைகள்) விற்பனை செய்துவருகிறது.

X
Dinamani
www.dinamani.com