மும்பை: மெக்ஸிகோ மற்றும் கனடா நாட்டின் மீதான கூடுதல் வரி விதிப்பு கட்டணங்களை ஒரு மாதத்திற்கு பிறகு அமல்படுத்தப்படுமென்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்ததையடுத்து, சென்செக்ஸ் 1.81 சதவிகிதமும் மற்றும் நிஃப்டி 1.62 சதவிகிதம் உயர்ந்து முடிந்தது.
இன்றைய காலை நேர வர்த்தகத்தில் சென்செக்ஸ் 1,471.85 புள்ளிகள் உயர்ந்து 78,658.59 புள்ளிகளாக இருந்தது. வர்த்தக முடிவில் மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,397.07 புள்ளிகள் உயர்ந்து 78,583.81 புள்ளிகளிலும், தேசிய பங்குச் சந்தையின் குறியீடான நிஃப்டி 378.20 புள்ளிகள் உயர்ந்து 23,739.25 புள்ளிகளாக நிலைபெற்றதையடுத்து சந்தை மூலதனம் இன்று ரூ.5.6 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.
30 பங்குகள் கொண்ட ப்ளூ-சிப் பேக்கிலிருந்து இன்று லார்சன் & டூப்ரோ கிட்டத்தட்ட 5 சதவிகிதம் உயர்ந்தது. அதானி போர்ட்ஸ், இண்டஸ் இண்ட் வங்கி, டாடா மோட்டார்ஸ், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அல்ட்ராடெக் சிமெண்ட், ஏசியன் பெயிண்ட்ஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்து வர்த்தகமானது. அதே வேளையில் ஐடிசி ஹோட்டல்கள், சொமேட்டோ, நெஸ்லே, மாருதி உள்ளிட்ட பங்குகள் சரிவை சந்தித்தது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி, பாரத் எலக்ட்ரானிக்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் இண்டஸ் இண்ட் வங்கி ஆகியவை நிஃப்டி 50-ல் இன்று 3 முதல் 6 சதவிகிதம் உயர்ந்தது. மறுபுறம் ட்ரெண்ட், பிரிட்டானியா, ஹீரோ மோட்டோகார்ப், நெஸ்லே மற்றும் டாடா கன்ஸ்யூமர் ஆகியவை 0.7 முதல் 6 சதவிகிதம் வரை சரிந்தது முடந்தது.
கோத்ரெஜ் பிராபர்டீஸ் 3 சதவிகிதத்திற்கு மேல் உயர்ந்த நிலையில், கிளாண்ட் பார்மாவின் பங்குகள் டிசம்பர் மாதம் ஏமாற்றமளிக்கும் காலாண்டைத் தொடர்ந்து அதன் பங்குகள் 5 சதவிகிதம் வரை சரிந்தது முடிந்தது.
சரிசெய்யப்பட்ட மொத்த வருவாய் (ஏஜிஆர்) நிலுவைத் தொகை குறித்த முடிவை மத்திய அரசு பரிசீலித்து வருவதாக நிதி செயலாளர் பாண்டே தெரிவித்ததையடுத்து வோடபோன் ஐடியா பங்குகள் 3 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
டிசம்பர் 31, 2024 உடன் முடிவடைந்த காலாண்டில் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு 12 சதவிகிதம் அதிகரித்து ரூ.271 கோடியாக இருப்பதாக நிறுவனம் அறிவித்ததை அடுத்து கேஸ்ட்ரால் இந்தியாவின் பங்குகள் 6 சதவிகிதத்திற்கும் அதிகமாக உயர்ந்தது.
கஜாரியா செராமிக்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம், கடந்த காலாண்டுடன் ஒப்பிடுகையில், 25 சதவிகிதம் ஆண்டுக்கு ஆண்டு சரிந்தையடுத்து 2025 ஆம் நிதியாண்டின் 3-வது காலாண்டில் இது ரூ.77.7 கோடியாக சரிந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு ரூ.104.2 கோடியாக இருந்தது.
இன்று 2,988 பங்குகள் வர்த்தகமான நிலையில் 1,951 பங்குகள் உயர்ந்தும் 863 பங்குகள் சரிந்தும் 85 பங்குகள் மாற்றமின்றி முடிந்தது.
ஆசிய சந்தைகளில் சியோல், டோக்கியோ மற்றும் ஹாங்காங் ஆகியவை கணிசமாக உயர்ந்தது. ஐரோப்பிய சந்தைகள் பெரும்பாலும் சரிந்து வர்த்தகமானது. அமெரிக்க சந்தைகள் நேற்று (திங்கள்கிழமை) சரிந்து முடிந்தது.
உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் 1.05 சதவிகிதம் சரிந்து பீப்பாய்க்கு 75.16 டாலராக உள்ளது.
அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் நேற்று (திங்கள்கிழமை) ரூ.3,958.37 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.
இதையும் படிக்க: பழைய நகைகளுக்கு புத்துயிா் அளிக்கும் ஜிஆா்டி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: தொடர்ந்து 4வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

அமெரிக்கா - ஈரான் ஒப்பந்தம் எதிரொலி: தொடர்ந்து 3வது நாளாக ஏற்றம் கண்ட சென்செக்ஸ், நிஃப்டி!

உலகளாவிய பங்குச் சந்தை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!

300 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கிய இந்திய பங்குச் சந்தை!
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!



