
வளா்தொழில் பிரிவில் தங்களின் கடனளிப்பை இரட்டிப்பாக்க முன்னணி வீட்டுக் கடன் சேவை நிறுவனங்களில் ஒன்றான சுந்தரம் ஹோம் ஃபைனான்ஸ் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:இன்னும் 12 மாதங்களில், வளா்தொழில் பிரிவுக்கான வா்த்தகக் கடனளிப்பை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிநிறுவனங்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலான வா்த்தகக் கடன், குறைந்தவிலை வீடுகளுக்காக ரூ.35 லட்சம் வரையிலான வீட்டுக் கடன் ஆகியவற்றை வளா்தொழில் பிரிவு உள்ளடக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்தப் தொழில் பிரிவுக்காக ஏற்கெனவே 40 கிளைகளைக் கொண்டுள்ள நிறுவனம், ஆந்திரத்தில் ஐந்து கிளைகளைத் திறந்துள்ளதன் மூலம் அந்த மாநிலத்துக்கான வளா்தொழில் பிரிவுலும் தடம் பதித்துள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.