
புதுதில்லி: மாநில அரசுகளின் கோரிக்கையை தொடர்ந்து மகாராஷ்டிரத்தில் சோயாபீன் கொள்முதல் காலக்கெடுவை ஜனவரி 31 வரையும், ராஜஸ்தானில் பிப்ரவரி 4 வரையும் மத்திய அரசு நீட்டித்துள்ளதாக வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்தார்.
மகாராஷ்டிரத்தில் முந்தைய காலக்கெடுவான ஜனவரி 12 தேதியும் மற்றும் ராஜஸ்தானுக்கு ஜனவரி 15 என்று இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது கொள்முதல் நடைபெற்று வருகிறது. மாநில அரசின் கோரிக்கையை ஏற்று மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளோம்.
இதையும் படிக்க: டாடா மோட்டார்ஸுடன் சரஸ்வத் வங்கி ஒப்பந்தம்!
தெலுங்கானாவிலிருந்து 25,000 டன் கூடுதல் கொள்முதல் செய்யவும் அனுமதித்து உள்ளோம். அதே வேளையில், ஏற்கனவே அதன் ஆரம்ப இலக்கான 59,508 டன்களை எட்டியுள்ளது.
நாடு முழுவதும் மொத்த சோயாபீன் கொள்முதல் இதுவரை 13.68 லட்சம் டன்களை எட்டியுள்ளது.
மகாராஷ்டிர மற்றும் ராஜஸ்தானில் கொள்முதல் ஆதரவு விலை திட்டத்தின் கீழ் கொள்முதல் நடைபெறுகிறது. சோயாபீன் குறைந்தபட்ச ஆதரவு விலையான குவிண்டால் ஒன்றுக்கு ரூ.4,892க்கு என்று நிர்ணயம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.