வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 3 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுசட்டவிரோத குடியேற்றத்தைத் தடுக்க பிரிட்டன்-பிரான்ஸ் 3 ஆண்டு ஒப்பந்தம்இஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்இந்திய வெளியுறவுக் கொள்கையில் ஆப்பிரிக்காவுக்கு அதிக முக்கியத்துவம்: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிஈரானுக்குப் பயணிக்க வேண்டாம்! இந்தியர்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!
/

சென்செக்ஸ், நிஃப்டி இரண்டாவது நாளாக முன்னேற்றம்

இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது.

News image
Updated On :15 ஜனவரி 2025, 9:45 pm

மும்பை / புது தில்லி: இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக தினமான புதன்கிழமையும் பங்குச்சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் லாபத்தில் நிறைவடைந்தன.

கச்சா எண்ணெய் விலை உயர்வால் இந்த வாரத் தொடக்கத்தில் உலகளாவிய அளவில் பங்குச்சந்தைகள் கடும் சரிவை எதிர் கொண்டன. செவ்வாய்க்கிழமை உலகளாவிய சந்தைகள் ஏற்றம் பெற்றன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் இருந்தது. இதனால், சென்செக்ஸ் 169.72 புள்ளிகளும், நிஃப்டி 90.10 புள்ளிகளும் உயர்ந்திருந்தன.

இதைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக புதன்கிழமையும் சந்தை ஓரளவு முன்னேற்றம் கண்டது. குறிப்பாக, ஃபார்மா, ஹெர்த்கேர் பங்குகள் விற்பனையை எதிர்கொண்டாலும், ஐடி, டெலிகாம், நுகர்வோர் சாதன பொருள்கள் உற்பத்தி நிறுவனப் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது. குறிப்பாக மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், ùஸôமாட்டோ, கோட்டக் வங்கி ஆகியவற்றுக்கு கிடைத்த வரவேற்பால் சந்தை நேர்மறையாக முடிந்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு: சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.424.31 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் செவ்வாய்க்கிழமை ரூ.8,132.26 கோடிக்கு பங்குகளை விற்றிருந்த நிலையில், உள்நாட்டு நிறுவனங்கள் ரூ.7,901.06 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

சென்செக்ஸ் முன்னேற்றம்: சென்செக்ஸ் காலையில் 400.51 புள்ளிகள் கூடுதலுடன் 76,900.14}இல் தொடங்கி அதிகபட்சமாக 76,991.05 வரை மேலே சென்றது. பின்னர், 76,479.70 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 224.45 புள்ளிகளை (0.29 சதவீதம்) கூடுதலுடன் 76,724.08}இல் நிறைவடைந்தது. மும்பை பங்குச்சந்தையில் மொத்தம் வர்த்தகமான 4,064 பங்குகளில் 2,150 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும், 1,806 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன. 108 பங்குகள் விலையில் மாற்றமின்றி நிலைபெற்றன.

ùஸôமாட்டோ அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள ùஸôமாட்டோ (4.36 சதவீதம்), என்டிபிசி (3.35 சதவீதம்), பவர்கிரிட் (3.03 சதவீதம்), கோட்டக் வங்கி, மாருதி, டெக் மஹிந்திரா, எல் & டி உள்பட 18 பங்குகள் விலை உயர்ந்த பட்டியலில் இருந்தன. அதே சமயம், எம் & எம், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஃபைனான்ஸ், ஆக்ஸிஸ் வங்கி, டாடா மோட்டார்ஸ், நெஸ்லே, சன்ஃபார்மா உள்பட 12 பங்குகள் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 37 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச்சந்தையில் 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி 74.40 புள்ளிகள் கூடுதலுடன் 23,250.45}இல் தொடங்கி அதிகபட்சமாக 23,293.65 வரை மேலே சென்றது. பின்னர், 23,146.45 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 37.15 புள்ளிகள் (0.16 சதவீதம்) கூடுதலுடன் 23,213.20}இல் நிறைவடைந்தது. நிஃப்டி பட்டியலில் 27 பங்குகள் விலையுயர்ந்த பட்டியலிலும், 23 பங்குகள் விலை குறைந்த பட்டியலிலும் இருந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.