ரூ.2,000 கோடி நிதி திரட்டும் பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி!

பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, நடப்பு காலாண்டில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாக ரூ.2,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி
பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி
Published on
Updated on
1 min read

புதுதில்லி: பொதுத் துறையைச் சேர்ந்த, பஞ்சாப் அண்ட் சிந்து வங்கி, நடப்பு காலாண்டில், தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.2,000 கோடி திரட்ட திட்டமிட்டுள்ளது.

தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் மூலம் நிதி திரட்ட ஒப்புதல் அளித்துள்ள நிலையில், வங்கியில் அரசு பங்களிப்பு 3 முதல் 4 சதவிகிதம் வரை சரியும் வேளையில் வங்கியின் மூலதனம் போதுமான விகிகத்தில் உயரும் என்றார். அதே வேளையில், 2024 டிசம்பர் இறுதி நிலவரப்படி பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியில் 98.25 சதவிகித பங்குகளை மத்திய அரசிடம் உள்ளது.

இந்நிலையில் மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிதி நிறுவனங்களுக்கான குறைந்தபட்ச பொது பங்கு விதிமுறைகளை பூர்த்தி செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்ட் 2026 வரை மத்திய அரசு நீட்டித்தது. தற்போதைய நிலையில், 12 பொதுத்துறை வங்கிகளில் 5 வங்கிகள் விதிமுறைகளுக்கு இன்னும் இணங்கவில்லை.

இதையும் படிக்க: விப்ரோ வருவாய் ரூ.22,319 கோடியாக உயா்வு

பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்வரூப் குமார் சாஹா ஏற்கனவே வணிக வங்கியாளர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமிக்கப்பட்டதாக தெரிவித்தார். செபி கூற்றின்படி, பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களும் 25 சதவிகிதம் வரையிலான குறைந்தபட்ச பொது பங்குதாரர் அளவை பூர்த்தி செய்ய வேண்டும்.

நடப்பு நிதியாண்டில் ரூ.5,000 கோடி உள்கட்டமைப்பு பத்திரங்களாகவும், ரூ.2,000 கோடி தகுதிவாய்ந்த நிறுவன முதலீட்டாளர்கள் வாயிலாகவும், மீதமுள்ள ரூ.3,000 கோடி பத்திரங்களாகவும் மொத்தம் ரூ.10,000 கோடி மூலதன திரட்டலுக்கு வாரியம் ஏற்கனவே ஒப்புதல் அளித்துள்ளது.

கடந்த மாதம், உள்கட்டமைப்பு கடன் வழங்குவதை விரிவுபடுத்தும் நோக்கில் உள்கட்டமைப்பு பத்திரங்களிலிருந்து ரூ.3,000 கோடியை வங்கி திரட்டியது.

2024 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், பஞ்சாப் அண்ட் சிந்து வங்கியின் நிகர லாபம் டிசம்பர் காலாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.282 கோடியாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வங்கி ரூ.114 கோடி நிகர லாபம் ஈட்டியது.

மதிப்பீட்டு காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.3,269 கோடியாக அதிகரித்தது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் ரூ.2,853 கோடியாக இருந்தது என்று பஞ்சாப் அண்ட சிந்து வங்கி பங்குச் சந்தையிடம் தெரிவித்துள்ளது.

இதேபோல், நிகர வாராக் கடன் 1.80 சதவிகிதத்திலிருந்து 1.25 சதவிகிதமாகக் குறைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com