

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(ஜன. 22) புதன்கிழமை சவரனுக்கு ரூ. 600 உயர்ந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில நாள்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. அந்த வகையில், திங்கள்கிழமை ஒரு சவரன் தங்கம் ரூ. 120 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை விலையில் எவ்வித மாற்றமுமின்றி ஒரு கிராம் தங்கம் ரூ.7,450-க்கும், சவரன் ரூ.59,600-க்கும் விற்பனையானது.
வரலாறு காணாத உயர்வு
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வரலாறு காணாத வகையில் இன்று சவரனுக்கு ரூ. 600 உயர்ந்து ரூ. 60,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இதுவரை இல்லாத அளவில் ரூ. 60,000-ஐ கடந்து விற்பனையாகிறது.
அதேபோல், கிராமுக்கு ரூ. 75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7525-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: ஈரோடு கிழக்கு: தேர்தல் அதிகாரி மாற்றம்
வெள்ளி விலை நிலவரம்
வெள்ளியின் விலை கடந்த 4 நாளாக எவ்வித மாற்றமுமின்றி விற்பனையான நிலையில், இன்று கிராமுக்கு ரூ. 10 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ. 103.90-க்கும், ஒரு கிலோ ரூ.1,03,900-க்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.