
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ. 86.47 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நேற்று 23 காசுகள் உயர்ந்து ரூ. 86.35 காசுகளாக இருந்த நிலையில், இன்று ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது.
2020 ஜனவரி முதல் கணக்கிடுகையில் ரூபாய் மதிப்பு 20% சரிந்துள்ளதாக அமெரிக்காவைச் சேர்ந்த மூடிஸ் என்ற நிதிச் சேவை நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த சில நாள்களாகவே உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தையில் தொடர்ச்சியாக ரூபாய் மதிப்பு நிலையற்றத் தன்மையைக் கொண்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் அடுத்தடுத்த அதிரடி அறிவிப்பால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். இது இந்திய பங்குச் சந்தையில் கடுமையாக எதிரொலிக்கிறது.
இன்றைய வணிகத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணியில் ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 86.46 காசுகளாகத் தொடங்கியது. பின்னர் படிப்படியாகச் சரிந்து ரூ. 86.52 காசுகளாக இருந்தது.
வணிக நேர முடிவில் நேற்றைய மதிப்பில் இருந்து 12 காசுகள் சரிந்து ரூ. 86.47 காசுகளாக வணிகமானது.
பங்குச் சந்தை நிலவரம்
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 115.39 புள்ளிகள் உயர்ந்து 76,520.38 புள்ளிகளாக வணிகம் நிறைவு பெற்றது. மொத்த வணிகத்தில் இது 0.15 சதவீதம் உயர்வாகும்.
தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 50 புள்ளிகள் உயர்ந்து 23,205.35 புள்ளிகளாக நிறைவு பெற்றது. இது மொத்த வணிகத்தில் 0.22 சதவீதம் உயர்வாகும்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... 1 டாலர் – 100 ரூபாய்?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.