குறைந்த விலையில் ஓப்போவின் புதிய ஸ்மார்ட்போன்!

ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்...
ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி
ஓப்போ கே13 எக்ஸ் 5ஜி படம்: Oppo / X
Published on
Updated on
1 min read

ஓப்போ நிறுவனம் கே13 எக்ஸ் 5ஜி என்ற புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

சீனாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் ஓப்போ நிறுவனத்தின், கே 13 5ஜி மாடல் ஸ்மார்ட்போனின் அடுத்த சீரிஸ் அறிமுகமாகியுள்ளது.

கேமராவுக்காக மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஓப்போ நிறுவனத்தில் வெளியாகும் ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் குறிப்பிடத்தகுந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளது.

கே 13 எக்ஸ் 5ஜி திரையின் சிறப்புகள்

ஓப்போ கே 13 5ஜி எக்ஸ் ஸ்மார்ட்போனானது 6.67 அங்குல எச்.டி., எல்.இ.டி. தொடுதிரை கொண்டது. பயன்படுத்துவதற்கு மிகவும் சுமூகமாக இருக்கும் வகையில் 120 எச்.இசட். ரெஃப்ரஷ் ரேட் கொண்டது. 1,200 நிட்ஸ் வெளிச்சத்தை உமிழும் வகையில் பிரகாசமுடையது.

கேமராவின் சிறப்புகள்

ஓப்போ கே 13 எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனானது பின்புறம் 50 எம்பி பிரதான கேமராவும், 2 எம்பி கூடுதல் கேமராவும் இடம்பெற்றுள்ளது. முன்புறம் 8 எம்பி கேமிரா வசதி கொண்டது.

செய்யறிவு தொழில்நுட்பத்தில் புகைப்படங்களில் உள்ள தேவையற்ற ஒலி, மங்களான தன்மை போன்றவற்றை நீக்கிக்கொள்ளும் சிறப்பம்சம் உடையது.

பேட்டரி சிறப்பம்சம்

6,000 mAh திறன் கொண்ட பேட்டரியுடன் வருகிறது. 45 வாட்ஸ் அதிவேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொண்டது. அதாவது, அரை மணிநேரத்தில் 50% சார்ஜ் ஆகிவிடும் என ஓப்போ குறிப்பிடுகிறது.

5 ஆண்டுகள் பேட்டரியைப் பயன்படுத்தினாலும், 80 சதவிகிதம் அதன் அசல் சக்தியுடன் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐபி65 துசு தடுப்பான் மற்றும் தண்ணீரில் இருந்து தற்காத்துக் கொள்ளும் திறன் கொண்ட வகையில் போன் தயாரிக்கப்பட்டுள்ளது.

விலை எவ்வளவு?

இந்திய சந்தைகளில் ரூ. 11,999-க்கு ஓப்போ கே 13 எக்ஸ் 5ஜி கிடைக்கிறது. இது 4 ஜிபி ரேம் - 128 ஜிபி நினைவகம் கொண்டது. 6ஜிபி ரேம் - 128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் வேண்டுமெனில் ரூ. 12,999 செலுத்த வேண்டும். 8ஜிபி ரேம் - 128 ஜிபி நினைவகம் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ. 14,999 ஆகும்.

மிட் நைட் வைலட் மற்றும் சன்செட் பீச் ஆகிய இரண்டு வண்ணங்களில் கிடைக்கிறது.

Summary

Oppo has launched a new smartphone called the K13X 5G.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com