20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்..! டாடா ஹாரியர் இவி!

20 நிமிடங்களில் அதிவேக சார்ஜிங்குடன் தயாரிக்கப்பட்டுள்ள டாடா ஹாரியர் இவி காரை பற்றி...
டாடா ஹாரியர் இவி.
டாடா ஹாரியர் இவி.

டாடா நிறுவனத்தின் தயாரிப்பில் டாடா ஹாரியர் கார் 20 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஏறும் வகையில் உருவாகியுள்ளது. இந்த காரின் சிறப்பம்சங்கள், விலை விவரம் குறித்து பார்க்கலாம்.

கார்களுக்கான தேர்வுகளில் எந்த காரை வாங்கலாம் என சிந்திக்கும் போது டாடா நிறுவனத்தின் காரை தவிர்த்துவிட்டு செல்வது கடினம். அந்த வகையில் தற்போதைய காலகட்டத்தில் மின்சார வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை ஊக்குவிக்கும் வகையில் அரசிடமிருந்து வரிச்சலுகைகளும் அளிக்கப்படுகின்றன.

அந்த வகையில். டாடா நிறுவனம், ஹாரியர் இவியை சமீபத்தில் அறிமுகம் செய்தது. ஹாரியர் ரியர் வீல் டிரைவ் வேரியண்ட்களின் முழு விலை விவரங்களையும், டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.

விலை எவ்வளவு?

இதன், தொடக்க வேரியண்டான அட்வெஞ்சர் 65-யின் ஷோரூம் விலை சுமார் ரூ.21.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல், அட்வெஞ்சர் எஸ் 65 ரூ.21.99 லட்சமாகவும், ஃபியர்லெஸ் பிளஸ் 65 ரூ.23.99 லட்சமாகவும், ஃபியர்லெஸ் பிளஸ் 75 ரூ. 24.99 லட்சமாகவும், டாப் வேரியண்டான எம்பவர்டு 75 ரூ.27.49 லட்சமாகவும் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

இந்த காரில் 75 கிலோவாட் ஹவர் பேட்டரி இடம் பெற்றுள்ளது. முழுமையாக சார்ஜ் செய்தால், அதிகபட்சமாக 627 கிலோ மீட்டர் தூரம் வரை செல்லும் என சான்றளிக்கப்பட்டுள்ளது. 120 ஹவர் டி.சி. அதிவேக சார்ஜர் மூலம் 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் செய்து விடலாம் என்றும் கூறப்படுகிறது.

பேட்டரி

75 கிலோ வாட் லித்தியம் அயன் பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது.

திறன்

390 பிஹெச்பி திறனையும், 504 முறுக்கு விசைத் திறனையும் வெளிப்படுத்தும்.

அதிகபட்ச வேகம்

மணிக்கு 180 கி.மீட்டர் வரை செல்லும்

பயண வகைகள்

6 வகையான நிலப்பரப்புக்கு ஏற்றவகையில், நார்மல், பனி, சேறு, சரளை மணல் பரப்பு, பாறை, புல் தரை என பல்வேறு மோட்கள் உள்ளன.

சார்ஜிங்

120 கி. வார் டிசி ஃபாஸ்ட் சார்ஜிங், 25 நிமிடங்களில் 20 முதல் 80 சதவிகிதம் சார்ஜ் ஏறும். 7.2 கி.வாட் ஏசி 10.7 மணி நேரத்தில் 10 முதல் 100 சதவிகிதம் சார்ஜ் ஏறும்.

பொழுதுபோக்கு அம்சம் 

ஹர்மன் மற்றும் சாம்சங் நியோ கியூஎல்இடி தொழில்நுட்பத்துடன் கூடிய 14.5 அங்குல சினிமாடிக் இன்ஃபோடெயின்மென்ட் டிஸ்ப்ளே உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com