வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்தது பரோடா வங்கி

வீட்டுக் கடன் வட்டியைக் குறைத்தது பரோடா வங்கி

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளது.
Published on

பொதுத் துறையைச் சோ்ந்த பரோடா வங்கி, வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதங்களை மேலும் குறைத்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 7.50 சதவீதத்தில் இருந்து 7.45 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய கடன் வாங்குவோருக்கு கடன் செயலாக்கக் கட்டணம் முற்றிலும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்தக் குறைப்பு, வீட்டு உரிமையை மேலும் எளிமையாக்குவதற்கும், வீட்டு வசதித் துறையில் தேவையை ஊக்குவிப்பதற்கும் உதவும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com