
விவோ நிறுவனத்தில் விவோ எக்ஸ் ஃபோல்டு 5 மற்றும் விவோ எக்ஸ்200 ஆகிய மொபைகளின் அறிமுக வெளியீட்டுத் தேதி குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
சீனாவைத் தலைமையிடமாகக் கொண்ட விவோ நிறுவனம் இந்தியாவில் அதிகம் விற்பனை ஆகும் முதல் 5 போன்களில் தனக்கென தனி இடத்தைப் பிடித்துள்ளது. அனைத்து போன்களுக்கும் சவால் அளிக்கும் வகையில் புதிய நவீன அமைப்புகளையும் செயல்படுத்திவருகிறது.
அந்த வகையில், வருகிற ஜூலை 14 ஆம் தேதி விவோவின் புதிய மாடலில் மடக்கூடிய வகையில் போன்கள் அறிமுகமாகவுள்ளன. அவை Vivo X Fold 5 மற்றும் Vivo X200 FE. இவை ஏற்கனவே ஜூன் மாதத்தில் சீனா மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்திய சந்தைகளில் அறிமுகமாகின்றன.
Vivo X Fold 5 மற்றும் X200 FE மாடல்கள் முறையே 6,000mAh மற்றும் 6,500mAh பேட்டரி திறன்களைக் கொண்டிருக்கும். இந்த போன்களை அதிகாரப்பூர்வ வலைதளம் மற்றும் பிளிப்கார்ட் வழியாக வாங்கிக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Vivo X200 FE மொபைல் 12 ஜிபி உள் நினைவகம் மற்றும் 256 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் விலை: ரூ.54,999. அதே நேரத்தில் 16 ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 ஜிபி நினைவகம் கொண்ட மொபைல் ரூ.59,999.
Vivo X Fold 5 மொபைல் 16 ஜிபி உள் நினைவகம் மற்றும் 512 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. இதன் விலை ரூ. 1,49,999-மாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Vivo X Fold 5 மொபைல் டைடானியம் கிரே ஷேடு மற்றும் தேவையான பல்வேறு நிறங்களில் கிடைக்கிறது. Vivo X200 FE மொபைல் அம்பெர் மஞ்சள், நீலம், லக்ஸ் கிரே ஷேடில் கிடைக்கிறது. இந்த மொபைல் 8.03 அங்குலத் திரையையும், செல்ஃபி, பின்பக்கம் என 50MP கேமராக்களையும் கொண்டுள்ளது.
இந்த போனுக்கு 80 வாட் வேகமான சார்ஜிங் மற்றும் 40 வாட் வயர்லெஸ் சார்ஜிங் ஆகியவை கொடுக்கப்பட்டிருக்கின்றன.
3.3 மி.மீட்டர் ஹெட்ஃபோன் ஜாக் இல்லாதவை, மெம்மரி கார்டு போட முடியாதவை, எஃப்எம் இல்லாதது போன்றவை குறைகளாக உள்ளன.
இதையும் படிக்க : ரூ. 10 ஆயிரத்தில் அதிக பேட்டரி திறனுடன் ஸ்மார்ட்போன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.