ஒன்பிளஸ் நோர்டு 5 விற்பனையில் தாமதம் ஏன்?

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்டு 5 விற்பனை நாளை முதல் தொடங்கும்.
ஒன்பிளஸ் நோர்டு 5
ஒன்பிளஸ் நோர்டு 5 படம் / நன்றி - ஒன்பிளஸ்
Published on
Updated on
1 min read

ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான நோர்டு 5 நாளை (ஜூலை 9) இந்தியாவில் அறிமுகமாகிறது. இதனுடன் மற்றொரு தயாரிப்பான ஒன்பிளஸ் நோர்டு சிஇ 5 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் விற்பனை இன்று அறிமுகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் கழித்து மறுநாள் (ஜூலை 9) நண்பகல் 12 மணிக்கு மின்னணு சந்தையில் விற்பனை தொடங்குகிறது.

அதிதிறன் வாய்ந்த சிப்செட்கள், தட்டையான வடிவமைப்பு, ஃபிளாக்‌ஷிப் அம்சங்கள் போன்றவை அடங்கிய இந்த ஸ்மாட்ர்போன் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது என்பது கூடுதல் மகிழ்ச்சியான செய்தி என ஒன்பிளஸ் தெரிவித்துள்ளது.

ரூ. 50 ஆயிரத்துக்கு கீழ் அனைத்து மேம்பட்ட அம்சங்களும் உடைய ஸ்மார்ட்போனை பயன்படுத்த வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஒன்பிளஸ் நோர்டு 5 சிறந்த தேர்வாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

சிறப்பம்சங்கள் என்னென்ன?

  • ஒன்பிளஸ் நோர்டு 5 ஸ்மார்ட்போனில் ஸ்நாப்டிராகன் 8எஸ் 3ஆம் தலைமுறை புராசஸர் பயன்படுத்தப்படுகிறது.

  • 6.83 அங்குல ஒஎல்இடி திரை கொண்டது. தண்ணீர் அல்லது எண்ணெய் பிசுபிசுப்புடன் விரல்கள் இருந்தாலும், திரையை இயக்க இயலும். இதற்காக அக்வா டச் 2.0 (Aqua Touch 2.0) என்ற அம்சம் இணைக்கப்பட்டுள்ளது.

  • தண்ணீர் மற்றும் தூசு புகாத்தன்மையுடன் IP65 திறன் உடையது.

  • திரையின் பயன்பாட்டை சுமூகமாக்கும் வகையில் 144Hz திறன் வழங்கப்பட்டுள்ளது.

  • 6,650mAh பேட்டரி திறனுடன் 80W வேகமாக சார்ஜ் செய்யும் திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • பின்புறம் 50MP சோனி கேமராவும் LYT-700 என்ற லென்ஸும் கொடுக்கப்பட்டுள்ளது. இதோடுமட்டுமின்றி 8MP அல்ட்ரா வைட் லென்ஸ் கொண்டது. முன்பக்கமும் 50MP கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

  • பயனர்களின் படைப்பாற்றல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் வகையில் ஒன்பிளஸ் செய்யறிவு (ஏஐ) அம்சம் உடையது.

விலை எவ்வளவு?

நினைவக திறனுக்கு ஏற்ப மூன்று வகையான விலையில் ஒன்பிளஸ் நோர்டு 5 கிடைக்கிறது.

8GB+256GB - ரூ. 31,999

12GB+256GB - ரூ. 34,999

2GB+512GB - ரூ. 37,999

இதையும் படிக்க | மிகக் குறைந்த விலையில்! டிஎஸ்எல்ஆர் கேமரா தரத்தில் ரியல்மியின் பட்ஜெட் 5ஜி!

Summary

The all-new OnePlus Nord 5 just dropped. Sale goes live on July 9th, 12 Noon IST for India

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com