நம்ப முடியாத விலையில் ஒன்பிளஸ் பேட் லைட்! இந்தியாவில் அறிமுகம்

ஒன்பிளஸ் பேட் லைட் என்ற புதிய கையடக்கக் கணினியை இந்திய சந்தைக்கு ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ளது.
ஒன்பிளஸ் பேட் லைட்
ஒன்பிளஸ் பேட் லைட் படம் / நன்றி - ஒன்பிளஸ்
Published on
Updated on
1 min read

ஒன்பிளஸ் பேட் லைட் என்ற புதிய கையடக்கக் கணினியை இந்திய சந்தைக்கு ஒன்பிளஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்து, ஐரோப்பா நாடுகளைத் தொடர்ந்து இந்தியாவில் ஒன்பிளஸ் பேட் லைட் அறிமுகமாகியுள்ளது. ஒன்பிளஸ் பேட் 3 வெளியான மூன்று மாதங்களில் மற்றொரு கையடக்கக் கணினியை ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் பேட் கோ, கையடக்கக் கணினியானது இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து ஒன்பிளஸ் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட பேட் லைட் கையடக்கக் கணினியை அறிமுகம் செய்துள்ளது.

சிறப்புகள் என்னென்ன?

  • ஒன்பிளஸ் பேட் லைட் 11 அங்குல எச்.டி. மற்றும் எல்.இ.டி. திரை கொண்டது. திரையின் திறன் 1920×1200 அளவு உடையது.

  • பயன்படுத்துவதற்கு திரை சுமூகமாக இருக்கும் வகையில் 90Hz திறன் கொடுக்கப்பட்டுள்ளது.

  • ஒளிக்கற்றைகள் திரையில் விழுந்து எதிரொலிக்காத வண்ணம் திரை வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், நீண்ட நேரம் சிரமமின்றி பயன்படுத்தலாம்.

  • மீடியாடெக் ஹெலியோ ஜி 100 என்ற சிப் உடன் ஆக்ஸிஜன் ஓஎஸ் புராசஸர் உடையது.

  • 128GB நினைவகத்தையும் 6GB உள்நினைவகத்தையும் கொண்டது.

  • மற்ற கையடக்கக் கணினியில் 8000mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டிருந்த நிலையில், டேப் லைட்டில் 9340mAh திறனுடைய பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

  • இத்தனை அம்சங்கள் கொடுக்கப்பட்டிருந்தாலும் இதன் விலை ரூ. 19,692 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • வைஃபை வேரியன்ட் உடைய கையடக்கக் கணினி விலை ரூ. 23,188 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | மோட்டோரோலா ஜி 96 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்!

Summary

OnePlus Pad Lite Launched in india as a New Budget Tablet

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com