இந்தியன் வங்கியின் வா்த்தகம் 10.2% அதிகரிப்பு

இந்தியன் வங்கியின் வா்த்தகம் 10.2% அதிகரிப்பு

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த ஜூன் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
Published on

முன்னணி பொதுத் துறை வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியின் மொத்த வா்த்தகம் கடந்த ஜூன் காலாண்டில் 5.1 சதவீதம் அதிகரித்துள்ளது.

வர்த்தகம் ரூ.13.44 லட்சம் கோடியாக உள்ளது. முந்தைய 2024-25-ஆம் நிதியாண்டின் அதே காலாண்டைவிட இது 10.2 சதவீதம் அதிகம். அப்போது வங்கியின் மொத்த வா்த்தகம் ரூ.12.20 லட்சம் கோடியாக இருந்தது.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியில் மேற்கொள்ளப்பட்டிருந்த வைப்பு நிதி முதலீடுகளில் சேமிப்புக் கணக்கு முதலீடு 3.0 சதவீதம் அதிகரித்து ரூ.2.38 லட்சம் கோடியாகவும், நடப்புக் கணக்கு முதலீடு 8.6 சதவீதம் அதிகரித்து ரூ.0.38 லட்சம் கோடியாகவும் உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com