2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!

2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள்...
2025-ல் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்கள்!
Published on
Updated on
2 min read

புதுதில்லி: 2025ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட இருசக்கர வாகனங்கள் வெறும் கவனத்தை ஈர்ப்பதை விட அதிகமான டெக் செயல்திறன் உள்ளடக்கியது.

தினசரி பயன்பாடு, நீண்ட பயணங்கள் மற்றும் மாறிவரும் சாலை நிலைமைகளை எளிதில் கையாளும் வகையில் அவை உருவாக்கப்பட்டுள்ளன.

1. ராயல் என்ஃபீல்ட் ஹண்டர் 350

விலை: 1.73 முதல் 2.07 லட்சம் (தோராயமாக)

ஹண்டர் 350 இளம் தலைமுறையினரிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதில் வழங்கப்பட்டுள்ள 350 சிசி இஞ்சின் நல்ல மைலேஜ் வழங்கும்.

• எஞ்சின்: 349.34 சிசி

• மைலேஜ்: தோராயமாக. 36 கிமீ/லி

• பவர்: 20.2 பிஹெச்பி

2. ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350

விலை: 2.22 – 2.34 லட்சம் (தோராயமாக)

ராயல் என்பீல்டு கிளாசிக் 350 வாகனத்தின் செயல்திறனை பொறுத்தவரையில், 350 சிசி சிங்கிள் சிலிண்டர் ஃப்யூயல் இன்ஜெக்டட் ஏர் மற்றும் ஆயில் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ஜின் அதிகபட்சமாக 6,100 ஆர்பிஎம்மில் 20.20 பிஹெச்பி பவரையும், 4,000 ஆர்பிஎம்மில் 27 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது.

• எஞ்சின்: 350 சிசி

• மைலேஜ்: சுமார் 35 கிமீ/லி

3. ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650

விலை: 3.72 முதல் 4.01 லட்சம் (தோராயமாக)

ராயல் என்ஃபீல்ட் கான்டினென்டல் ஜிடி 650 வாகனம் 648சிசி இன்லைன் ட்வின்-சிலிண்டர் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 7250 ஆர்பிஎம்-ல் 34.9 kW பவர் அவுட்புட்டையும், 5150 ஆர்பிஎம்-ல் 52.3 Nm டார்க்கையும் உற்பத்தி செய்கிறது.

இந்த இஞ்சின் 6-ஸ்பீடு கான்ஸ்டன்ட் மெஷ் கியர்பாக்ஸுடன் வருகிறது. இது சிறந்த பவர் டெலிவரி மற்றும் மென்மையான பயண அனுபவத்தை வழங்கும்.

• எஞ்சின்: 648 சிசி

• மைலேஜ்: 25 கிமீ/லி

• பவர்: 47 பிஹெச்பி

4. யமஹா எம்டி 15 வி2

விலை: 2.03 – 2.09 லட்சம் (தோராயமாக)

எம்டி 15 வி2 செயல்திறனுக்காக உருவாக்கப்பட்டது. இது இருசக்கர வாகன ஆர்வலர்களிடையே பிரபலமான தேர்வாக உள்ளது.

• எஞ்சின்: 155 சிசி

• மைலேஜ்: சுமார் 49 கிமீ/லி

• பவர்: 18.1 பிஹெச்பி

5. யமஹா ஆர்15 வி4

விலை: 2.20 – 2.30 லட்சம் (தோராயமாக)

ஸ்போர்ட்டி வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்கு பெயர் பெற்ற இந்த வாகனம் தினசரி பயணம் மற்றும் வார இறுதி பயணம் மேற்கொள்ள ஒரு சிறந்த தேர்வாகும்.

சாலைகளில் சிறந்த தெரிவுநிலைக்காக யமஹா ஆர்15 வி4 மேம்பட்ட எல்.ஈ.டி. லைட்டிங் அமைப்பைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் பிரகாசமான வெளிச்சத்தை வழங்கும் வகுப்பு 'டி' இரு- செயல்பாட்டு கொண்ட ஹெட்லைட் யூனிட்டைக் கொண்டுள்ளது.

வாகனத்தைப் பற்றி மேலும்:

• மைலேஜ்: சுமார் 51.4 கிமீ/லி

• பவர்: 18.1 bhp

6. ஹோண்டா எஸ்.பி. 125

விலை: 1.08 – 1.17 லட்சம் (தோராயமாக)

ஹோண்டா எஸ்பி 125 வாகனத்தின் திறமையான செயல்திறன், ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுக்காக அறியப்பட்ட வாகனம் இதுவே ஆகும்.

நெடுஞ்சாலைகளில் பயணிக்க ஏற்றது. அன்றாட பயணம் மேற்கொள்வோருக்கு எளிதாக்கும் அம்சங்களுடன் வருகிறது. இந்த வாகனம் மாணவர்கள் அல்லது முதல் முறையாக வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாகும்.

• எஞ்சின்: 123.94 சிசி

• மைலேஜ்: தோராயமாக. 63 கிமீ/லி

• பவர்: 10.72 பிஎச்பி

7. ராயல் என்ஃபீல்ட் புல்லட் 350

விலை: 2.00 – 2.49 லட்சம் (தோராயமாக)

ராயல் என்பீல்டு புல்லட் 350 வாகனத்தில், சக்தி வாய்ந்த 349 சிசி சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. நீங்கள் மெதுவான, சக்திவாய்ந்த மற்றும் கவனத்தை ஈர்க்கும் பயணத்தை விரும்பினால் இது அனைத்து வகையிலும் வலு சேர்க்கும்.

பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.

8. ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர்

விலை: 1.13 – 1.17 லட்சம் (தோராயமாக)

ஹீரோவின் எக்ஸ்ட்ரீம் 125R, இன்னும் கொஞ்சம் நேர்த்தியை விரும்பும் அன்றாட பயணம் செய்பவர்களுக்கானது. ஸ்டைலுடன் செயல்திறனை சமநிலைப்படுத்துகிறது.

எல்.ஈ.டி. விளக்குகள், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் ஸ்டெப் இருக்கைகள் ஆகிய அம்சங்களை வழங்குகிறது. தினமும் பயணம் செய்பவர்களுக்கும், திறமையை விரும்புபவர்களுக்கும் இது ஒரு ஸ்மார்ட் விருப்பமாகும்.

• எஞ்சின்: 125 சிசி

• அம்சங்கள்: ஐபிஎஸ், எல்இடி விளக்குகள், ஸ்பிளிட் இருக்கை (வேரியன்ட் வாரியாக).

இதையும் படிக்க: ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதல் காலாண்டு நிகர லாபம் 78% உயர்வு!

Summary

A handful of new models are drawing attention for their looks, performance, and practicality. Let us take a closer look at these models

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com