
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கு விற்பனையாகிறது.
வாரத்தின் இரண்டாவது நாளான செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் தங்கம் விலை ரூ.105 உயர்ந்து ரூ.9,285-க்கும், ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.840 உயர்ந்து ரூ.74,280-க்கும் விற்பனையாகி வருகிறது.
சென்னையில் சமீபத்திய காலமாகவே தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கமாக இருந்துவந்தாலும், கடந்த வாரமாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது.
வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், வெள்ளிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயா்ந்து ரூ.72,880-க்கும், சனிக்கிழமை அதிரடியாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.73,360-க்கும், நான்காவது நாளாக சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.73,440க்கு விற்பனையானது. கடந்த 5 நாள்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1480 அதிகரித்துள்ளது.
அதேபோல், வெள்ளிவிலை ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.128-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ.2,000 உயர்ந்து ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.